“ம்ம் ஸ்மார்ட்..சரி பைன்..பட் அந்த செக்யூரிட்டி எங்க நம்பிக்கைக்கு தகுந்தவர் தான்.இந்த காம்ப்பவுண்ட் வால் தொடங்கி வெளில போற வர எல்லாருமே நம்பிக்கையானவங்க தான்.”
“சாரி டு இன்டரப்ட்..ஆனா அப்படி நம்பிக்கையானவங்க இருக்கும் போது தான மிஸ்டர் சந்திர வர்மா ஐ மீன் உங்க தாத்தா கொல்லப்பட்டு இருக்கார்”,அடுத்த நொடி அவன் முகம் கறுத்திருந்திருந்தது.கையை அழுந்த மூடியவனாய் தன்னை சீர்படுத்திக் கொண்டான்.
“அது இயற்கையான மரணமாகவும் இருக்கலாம் மிஸ்..!”
“உங்களை ஹர்ட் பண்ணணும்னு சொல்லல..நான் எந்த ஒரு விஷயத்தையும் யோசிக்காம பண்ண மாட்டேன்னு சொல்றேன்.சோ என்னைப் பத்தின விஷயங்கள் உங்களையும் என் ஹையர் அபிஷியலையும் தாண்டி யாருக்கும் தெரியாம இருக்குறது தான் நல்லது.இல்ல உங்களுக்கு ப்ராப்ளம் இல்லனா யாருக்கெல்லாம் என்னைப் பத்தி தெரியணுமோ க்விக்கா ஒரு இன்ட்ரோ கொடுத்துருங்க..நோ இஷூஸ்..”
சில நொடி சிந்தித்தவனாய்,”நீங்க சொலல்றது படியே பண்ணிரலாம்.இன்னைக்கு வீட்ல யாரும் இல்லை எல்லாரும் மதுரா வரை போய்ருக்காங்க.நாளைக்கு ஈவ்னிங் தான் வருவாங்க..சோ அவங்க வந்தப்பறம் உங்களை என் ப்ரெண்ட்னு சொல்லியே அறிமுகப்படுத்துறேன்.அதர் தன் தட் உங்க ப்ரொபஷன் பத்தியெல்லாம் என்ன சொல்லனுமோ நீங்களே சொல்லிக்கலாம்.பிகாஸ் நானா பேசுற வார்த்தைகளைத் தவிர எந்த கேள்வியும் யாரும் என்கிட்ட எதுவும் கேட்கமாட்டாங்க..”
அலட்சியமாய் இரு தோள்களையும் குலுக்கியவளாய் சுற்றும் பார்த்தவள்,”எனக்கான ரூம் எதுனு சொன்னா….?”
“மேல போய் ரைட் சைட்ல செகண்ட் ரூம்..அண்ட் எட்டு மணிக்கு டின்னர் டேபிள்ல மீட் பண்ணலாம்..”,என்றவன் ஆணை போல் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட தன் பெட்டியை எடுத்துக் கொண்டு படியேறினாள்.
வீடு மொத்தமும் பணத்தின் அளவை பறைசாற்றியது.கிட்டதட்ட அரண்மனை போன்ற கட்டமைப்பு.அத்தனை பிரம்மாண்டம் ஒவ்வொன்றிலும்.இருந்தும் எதையும் பொருட்டாய் கூட மதியாது தனக்கான அறைக்குள் நுழைந்தாள் ஷியாமா.
மிகப் பெரிய விசாலமான அறை கம்பீரமான பஞ்சு மெத்தையோடு கூடிய கட்டில் நடுநாயகமாய் போடப்பட்டிருக்க அங்கேயே அனைத்து வசதிகளும் இருந்தன.கிட்டத்தட்ட ஒரு ஹோட்டல் அறை போலவே தோன்றியது அவளுக்கு.
இத்தனை ஆடம்பரமே ஒரு கட்டத்தில் அவர்களுக்கு எதிரியாய் மாறி விடுகிறது என்று