(Reading time: 11 - 22 minutes)
Vannamillaa ennangal
Vannamillaa ennangal

விருந்தாளியான தன் அறையே அத்தனை பிரம்மாண்டமாய் இருக்கும் போது ஜமீன்தாரின் அறையை பற்றிக் கேட்கவா வேண்டும்.ஜெய்ப்பூருக்கே உரிய மார்பிள் கற்களின் வேலைப்பாடுகளால் அறை மிளிர்ந்தது.இருந்தும் சிறிது நாட்கள் சுத்தம் செய்யாததற்கான அறிகுறியாய் அங்கங்கு சற்று தூசி படிந்திருந்தது.

இன்ஸிண்ட் நடந்த அப்பறம் யாரும் இங்க வர்றதில்லையா?”

நோ இன்வெஸ்டிகேஷன் நடந்துட்டு இருந்ததால யாரையும் வர வேண்டாம்னு சொல்லி வச்சுருக்கோம்.”

..பட் எனி சான்ஸ் வித் அவுட் யுவர் நாலெட்ஜ்?”

நோ வே இந்த ரூம்க்கு டூப்லிகேட் கீ கிடையாது.ஆல்சோ சாவி இல்லாம இதை திறக்க வேற ஆப்ஷனே இல்ல.கதவை உடைக்குறதை தவிர.”

கூல்..”,என்றவள் ஒவ்வொரு இடமாய் ஆராய ஆரம்பித்தாள்.மேஜை மீதிருந்த புத்தகங்கள் அலமாரியினுள் இருந்த அவரது உடைமைகள் என ஒவ்வொன்றாய் பார்த்து வந்தவள் அனைத்தையும் தனக்குள் பதிய வைத்துக் கொண்டாள்.

இருந்தும் பெரிதாய் விசாரனைக்கு உதவும்படி இருந்ததாய் தோன்றாமல் போக கட்டிலை ஒரு முறை ஆராய்ந்தவள் அவனருகில் வந்து நின்றாள்.ஒருவித நமட்டுச் சிரிப்போடு அவளை ஏறிட்டவன்,

போலீஸ் இன்வெஸ்டிகேஷன்னு எத்தனையோ முயற்சிப் பண்ணி பார்த்து கிடைக்காத விஷயம் உன்னோட இந்த ரோபோடிக் ஸ்கேன்ல தெரிஞ்சுடும்னு நினைக்குறியா?”

கைகளை பின்னால் கட்டியவாறே அவனுக்கு சற்றும் சளைத்தவளில்லை எனும்படியாய்,”சொல்ல முடியாது மகிழன்..சில நேரங்கள்ல சின்ன சின்ன விஷயங்களை வச்சு தான் பெரிய பெரிய தவறுகளை கண்டுபிடிக்க வேண்டியதா இருக்கும்.

அது என்னோட பலமான நம்பிக்கை கூட.எந்த ஒரு குற்றவாளியும் தன்னை அறியாம தனக்கெதிரான ஒரு ஆதாரத்தை நிச்சயமா விட்டுட்டு போய்ருப்பான்.அது எங்க கைக்கு கிடைக்குற வரை தான் அவனோட ஆட்டம் எல்லாம்..

என்னோட ஸ்ட்ராங் ப்லீஃப் எப்போவுமே தப்பா போனதில்ல.அதை வச்சு இன்னொரு விஷயம் சொல்லட்டுமா?”

ஆர்வமாய் ஒரு நொடிப் பார்வை அவனிடத்தில்,”உங்க தாத்தாவோட மரணம் இயற்கையானதா இல்லாத பட்சத்தில் அதற்கான காரணம் ஐ மீன் அந்த கொலைலைகாரன் உங்கள்ல ஒருத்தன் தான்.”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.