(Reading time: 13 - 25 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

என்று சிந்தித்தான். அவனை மேலும் சிந்திக்க விடாமல் மீண்டும் கிரண் தேவி,

“முதலில் மரியாதைக் கற்றுக் கொள்ளுங்கள் வீரரே” எனவும்,

“யாரைப் பார்த்து மரியாதைப் பற்றிப் பேசுகிறாய்? ஒரு வேலைக்காரி வீரனைப் பார்த்துக் கூறும் வார்த்தையா இது? இதற்கே உன்னைத் தண்டிக்கும் அதிகாரம் எனக்கு உள்ளது . அதை உணர்வாயா நீ?” என்றான் வீரன்.

“ஒரே நாளில் என்னால் உங்கள் ராணியிடம் தனி அந்தஸ்து பெற்ற நிலையிலும், நான் தங்களை வீரரே என்றும், மரியாதைப் பன்மையிலும் அழைக்கிறேன். ஆனால் தாங்களோ இந்த நொடி வரை மரியாதை என்றால் என்ன ? என்றுக் கேட்பீர்கள் போல் இருக்கிறது?”

உனக்கு எல்லாம் எதற்கு மரியாதைக் கொடுக்க வேண்டும்

“சக மனித உயிர்கள் ஒவ்வொன்றுக்கும் மரியாதைக் கொடுத்த்த்தான் ஆக வேண்டும் வீரரே.  அரண்மனை வேலைக்கு வந்ததால் நான் எந்த விதத்திலும் தாழ்ந்தவள் அல்ல. நீங்கள் உயர்ந்தவர்களும் அல்ல. பெண்களை தாழ்வாக நினைக்கும் எந்த சமூகமும் முன்னேற்றப் பாதையில் செல்வது கடினம். பெண்களைப் போற்றி வணங்கும் சமூகம் வரலாற்றில் நிலைப் பெற்று இருக்கும். எனவே யாரையும் இழிவுப் படுத்திப் பேசாதீர்” என்றுக் கூறிவிட்டுக் காமினியை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டாள் கிரண் தேவி.

அவளின் படபட பேச்சைப் பார்த்த வீரர்கள், இவள் யார் ? என்ற கேள்விகளோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

இங்கே உள்ள வீரர்கள் முஹலாய சட்டப் படி நடந்து கொண்டாலும். அவர்களின் உள்ளங்கள் ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்ததே. எனவே என்று வேண்டுமானாலும் அவர்கள் மாறலாம் என்ற எண்ணிய அக்பர் , அவரின் உளவாளி ஒருவனை இந்த வீரர்களோடு கலந்து விட்டு இருக்கிறார்.

தற்போது கிரண் தேவிக்கும், வாயில் காவலனுக்கும் இடையே நடந்த வாக்கு வாதத்தைக் கூர்ந்து கவனித்த அந்த ஒற்றனுக்கு கிரண் தேவி மேல் சந்தேகம் ஏற்பட்டது. யாரும் அறியா வண்ணம் கிரண் தேவி மற்றும் காமினியைப் பின் தொடர்ந்தான்.

காமினியின் குடும்பத்தினர், சொந்த பந்தம் அனைவருமே ஒற்றர் படையைச் சேர்ந்தவர்கள். எல்லோருமே ராணாக்குக் கட்டுப் பட்டவர்கள். ஆளுக்கொரு இடமாகச் சுற்றி வந்து தகவல்கள் சேகரிப்பவர்கள். ஒருவருக்குத் தெரிந்த தகவலை மற்றொருவர் கூட அறியாதவாறு ரானாவிடம் சேர்ப்பவர்கள்.

தங்கள் இல்லத்திற்கு வந்த காமினியிடம் கிரண் தேவி,

“எப்படியோ நம் திட்டம் பலித்து விட்டது காமினி. இனி வேலை சுலபம்” என்றாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.