(Reading time: 13 - 25 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

“இல்லை ராணி. நாம் இன்றைக்கு அவசரப் பட்டு விட்டோமோ என்று தோன்றுகிறது. சற்றுப் பொறுமையாக ஜோதா ராணியிடம் சென்று சேரும்படியாய் இருந்து இருக்கலாமோ என்று சிந்திக்கிறேன்”

“இல்லை காமினி. அதற்கு அவகாசம் இல்லை. அதோடு எத்தனை விரைவாக தகவல்களை ரானாவிடம் கொண்டுசேர்க்கிறோமோ அத்தனைக்கு நம் நோக்கம் வெற்றி பெரும் வாய்ப்பு அதிகம் ஆகும்”

“அது உண்மைதான் இளவரசி” என்று ஒத்துக் கொண்டாள் காமினி.

இவர்கள் திட்டபடி மறுநாள் ஆம்பர் ராணி ஜோதாத் தன் பரிவாரங்களுடன் பதேபூர் நோக்கிச் சென்ற போது காமினி, கிரண் தேவி , அவர்கள் குடும்பமும் புறப்பட்டார்கள்.

ஜோதா ராணிப் பல்லாக்கில் வர, காவல் வீரர்கள் புரவிகளிலும், மற்ற சேவகர்கள் நடந்தும் சென்றனர். கிரண் தேவிக்குப் புரவியில் ஏறி சவாரி செய்ய வெகு ஆசை. ஆனால் தன்னைத் தானே காட்டிக் கொடுத்துக் கொள்ளக் கூடாது என்று தன்னை அடக்கிக் கொண்டாள். என்றாலும் அந்தப் புரவிகளையும், வீரர்களையும் அடிக்கடி பார்வையிட்டுக் கொண்டே வந்தாள்.

அப்போதுதான் புரவி வீரர்களில் ஒருவன் அடிக்கடி இவளையே நோட்டமிடுவதை உணர்ந்து கொண்டாள். யாராக இருக்கும் என்று யோசித்தவளுக்கு விடை ஏதும் கிடைக்கததால் விட்டு விட்டாள். ஆனாலும் அவளின் கைகள் அடிக்கடி அவளின் இடுப்புக் கச்சைக்குள் சென்று தொட்டுப் பார்த்துத் திரும்பியது.

இதுவும் அந்த புரவி வீரனின் கண்களில் இருந்து தப்பவில்லை. பயணத் தூரம் அதிகமே என்பதால், அங்கே அங்கே ஓய்வு எடுத்துக் கொண்டு சென்றனர். அவ்வாறு ஓரிடத்தில் ஓய்வெடுக்கும் போது, ஜோதா ராணி கூடாரத்தில் தங்கி இருந்தாள். மற்றவர்கள் அங்கே அங்கே சிதறலாக தங்கி இருந்தனர்.

எப்போதுமே ராணி கிரண் தேவி சற்றுத் தனிமை விரும்பி என்பதால், கடைசிக் கூடாரத்தில் தங்கி இருந்தாள்.

எல்லோரும்  உறங்கும் போது மெதுவாக வெளியே வந்து அங்கே சுற்று முற்றும் பார்த்துக் கொண்டு இருந்தவள் அருகில் யாரோ வரவும் திரும்பிப் பார்த்தவள் திகைத்தாள்.

ஏன் என்றால் முஹலாயர்களின் போர் உடையும், அவர்களின் கவசங்களும் அணிந்து இருந்த அந்த வீரன், புரவியில் இருந்தபடி இவளைப் பார்வையிட்டுக் கொண்டு இருந்தவன்.

“யார் நீ?” என்றுக் கேட்டபடி இடையில் இருக்கும் குறுவாளை கிரண் தேவி எடுக்கவும்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.