(Reading time: 13 - 25 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

அவள் கையைப் பிடித்துத் தடுத்தான். அந்தத் தொடுதலில் அது இளவரசன் ப்ரித்விராஜ் என்று உணர்ந்து கொண்டவள்,

“இளவரசே , தாங்களா?” என்றுக் கேட்டாள்.

“தேவி, என்னை அறிந்து கொண்டாயா?” என்றுக் கேட்ட ப்ரித்வி, அவளின் கையைப் பற்றித் தன்னோடு அணைத்துக் கொண்டான்.

இளவரசனின் மார்பில் சாய்ந்து கொண்ட ராணி கிரண் தேவி,

“எதற்காக புரவியில் இருந்தபடி என்னைப் பார்த்துக் கொண்டே வந்தீர்கள்?” என்றுக் கேட்டாள்.

“ஹ..ஹ. கவனித்து விட்டாயா தேவி. நாம் சந்தித்த நாளில் இருந்து இதுவரை நம் பயணம் ஒன்றாகவே இருந்தது. இந்த இரு நாட்களாகப் பிரிந்ததில் , மீண்டும் உன்னைச் சந்தித்ததும், உன்னை விட்டு என் கண்கள் நீங்க மறுக்கின்றதே?” என்றுக் கூறினான் இளவரசன்.

“அடேயப்பா .. இளவரசரின் வர்ணனை எல்லாம் பலமாக இருக்கிறதே”

“ஹ. ஹ. உன்னைப் பிரிந்த ஏக்கத்தில் தானாக வெளி வருகிறது தேவி”

இதைப் போல் மேலும் சற்று நேரம் பேசிக் கொண்டு இருந்த ப்ரித்விராஜ்,

“தேவி, நான் உன்னைக் கவனமாக இருக்கச் சொன்னேன் தானே”

“ஏன் இளவரசே, கவனமாகத் தான் இருக்கிறேன் “ என்றாள் கிரண் தேவி.

“இல்லை தேவி. அக்பருக்கு உன் மேல் சந்தேகம் வந்து விட்டது” என்றான் ப்ரித்வி.

“எப்படி இளவரசே? நான் இன்னும் அவரை நேரில் கூடச் சந்திக்கவில்லையே?”

“ராம் சந்த் சொன்னது போல் அக்பரை ஏமாற்றுவது அத்தனை எளிதல்ல. நாம் அதிக கவனமாக இருக்க வேண்டும்?”

“எப்படி சொல்கிறீர்கள் நேரடியாக பார்க்காத என் மேல் அக்பருக்கு எப்படி சந்தேகம் வந்து இருக்கும்?”

“உன்னைப் பற்றிய விவரங்களை அக்பரின் ஒற்றன் ஒருவன் கூறி இருக்கிறான். அவர் உன்னை நன்றாகப் பின் தொடரும் படி கூறி உள்ளார். அவனுக்கு உள்ளூரில் வேலை என்பதால், என்னைத் தான் உன்னைப் பின் தொடரும்படி கூறி உள்ளான்” என்றுக் கூறவும்

“ஓ..” என்றவள், “சரி இளவரசே, நான் கவனமாக இருக்கிறேன். இப்போது நாம் திரும்பி விடலாம். நீங்கள் கூறிய பிறகு உங்களையும் , என்னையும் சேர்த்துக் கண்காணிக்கவும் ஆள் ஏற்பாடு செய்து இருக்கலாம் என்று தோன்றுகிறது. “ என்றாள்.

“சரி . சரி கவனம். “ என்றுக் கூறிவிட்டு, மீண்டும் அவளை ஒருதரம் அணைத்து

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.