Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 05 - Chillzee Story - 5.0 out of 5 based on 2 votes
Oru kili uruguthu
Change font size:
Pin It

தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 05 - Chillzee Story

அத்தியாயம் – 05

க்தி சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதியாக இருந்த சத்யா, அவள் சாப்பிட்டு முடித்த உடன், தன் கேள்விகளை தொடர்ந்தாள்.

“இந்த ஊருல என்ன செய்றதா ப்ளான் வச்சிருக்கீங்க சக்தி?”

“ப்ளான்ன்னு பெருசா எதுவும் யோசிக்கலை. இனிமேல் தான் யோசிக்கனும்”

பொய் தானே சொல்கிறாய் என்பதுப் போல அவளைப் பார்த்தாள் சத்யா.

“உண்மையாவே எதுவுமே யோசிக்கலை சத்யா. ஏன் இப்படி சந்தேகமா பார்க்குறீங்க?”

“எப்போவும் அன்டர் கவர்ல வர போலீஸ், டிபார்ட்மென்ட்ல சண்டை போட்ட மாதிரி செட் அப் செய்துட்டு இப்படி வந்து குற்றவாளிகளை வளைச்சு பிடிப்பாங்களே அப்படி ஏதாவது செய்யப் போறீங்களா?”

சக்தியின் முகம் திரும்பவும் புன்சிரிப்பால் மலர்ந்தது.

“நிறைய சினிமா பார்ப்பீங்களா சத்யா?”

“ஹுஹும் அதெல்லாம் பார்க்குற பழக்கமில்லை. ஆனால், நீங்களும் அவரும் ஓவரா ரியாக்ட் செய்த மாதிரி இருந்துச்சு. அதான் கேட்டேன்.”

“ப்ச்” அலுத்துக் கொண்டாள் சக்தி.

“சரி உங்க டிபார்ட்மென்ட் எப்படியாவது போகட்டும் அதை விடுங்க சக்தி!”

“என்னை கேட்டது இருக்கட்டும் நீங்க சொல்லுங்க சத்யா. சீரியல் பார்க்க மாட்டீங்க, சினிமா பார்க்க மாட்டீங்க, வேற என்ன செய்வீங்க?”

“நிறைய புக்ஸ் படிப்பேன். அதும் மிஸ்டரின்னா எனக்கு உயிரு! ஷெர்லக் ஹோம்ஸ், அகதா கிறிஸ்டி, மேரி ஹிகின்ஸ் கிளார்க், ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, தமிழ்வாணன்... இப்படி எந்த மிஸ்ட்ரி கதையா இருந்தாலும் படிப்பேன்”

“தென்றல்வாணன் சரியா தேடி கண்டுப்பிடிச்சு தான் உங்களை கல்யாணம் செய்திருக்கார்! அவர் இவ்வளவு சக்சஸ்ஃபுல் போலீஸா இருக்குறதுக்கு பின்னாடி இருக்க சீக்ரட் இப்போ தான் தெரியுது!”

சக்தியின் குரலில் இருந்த பரிகாசம் புரிந்தாலும் அதைக் கண்டுக்கொள்ளாமல் பதில் சொன்னாள் சத்யா.

“கரக்ட்டா தான் சொன்னீங்க சக்தி! ஆனால், தயவு செஞ்சு அவர் கிட்டப் போய் இதை சொல்லிடாதீங்க! அவரு முகம் போற விதத்தைப் பார்த்து உங்களுக்கு பத்து நாளுக்கு தூக்கம் வராது”

சிரிக்காமல் இருக்க முயன்றும், முடியாமல், சிரித்தாள் சக்தி!

“ஓகே சக்தி, என் குட்டி மாமியார் கத்துவாங்க. நான் கிளம்புறேன்”

 

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5 
  •  Next 
  •  End 

About the Author

Chillzee Story

On-going Stories

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 05 - Chillzee StoryAdharv 2019-09-25 13:18
I change my mind andh Oru parrot is sathya 😍😍😍 not abhi!! Just loved the way sathya is characterized :hatsoff: sema lively counters and avanga part of dialogues (instantaneous) are entertaining :dance: but avanga kutti mil kitta mattum daughter in law mathiri strict officer ah pesurangale 😔 abhi unga akka kala irunitanga ninga unga official jolli.mattum parkalam :yes: did sakthi find something?? Waiting for next episode. Thank you and keep rocking. 👏👏👏
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 05 - Chillzee StorySrivi 2019-09-25 07:51
Sema cute update.. nice work chilzee team.. I have started liking sathya than anyone else.. Awesome characterisation
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 05 - Chillzee Storyரவை. 2019-09-25 07:24
சில்சி! சரளமான, சுவாரசியமான கதைப்போக்கு! கேரக்டர்களின் தனிப்பட்ட குணாதிசயங்களை சுட்டிக்காட்டுகிற நளினம், ஊடே இழையும் மர்மம் எல்லாமே ஜோர்! வெளுத்து வாங்குங்க! வாழ்த்துக்கள்!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 05 - Chillzee Storymadhumathi9 2019-09-25 05:21
:clap: nice epi chillzee team (y) :thnkx: 4 this epi.eagarly waiting 4 next epi.kathai interesting aaga poguthu.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top