ஆனால் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு என்று ஒன்று இருக்கத்தானே வேண்டும்,
உள்ளுக்குள்ளே புதைந்திருந்த நித்யாவின் குழப்பங்கள் ஒருநாள் வெடித்து சிதற தானே வேண்டும், அப்போதாவது அவளின் பிரச்சனையை கார்த்திக் புரிந்துக் கொள்வானா?
திருமணம் முடிந்து சில மாதங்கள் ஓடிவிட்டிருந்த நிலையில், கார்த்திக்கும் ஞானசெல்வமும் அலுவலகம் சென்றிருக்க, மாலை நேரம் குறிஞ்சியம்மாளும் வஞ்சியும் கோவிலுக்கு செல்ல தயாராகி கொண்டிருந்தனர். நித்யாவும் அவர்களோடு செல்வதாக நேற்றே மூவரும் பேசி முடிவு செய்திருந்தனர்.
அதனால் தயாரான இருவரும் நித்யாவை அழைக்க, "அம்மா நீங்க போயிட்டு வாங்கம்மா, நான் இன்னைக்கு கோவிலுக்கு வரக் கூடாது," என்று அவள் சொல்லவும், அதற்கான காரணத்தை புரிந்துக் கொண்ட இருவரும்,
"சரி ரெஸ்ட் எடு, நாங்க போயிட்டு வரோம்," என்று சொல்லி விடைப் பெற்றனர்.
அவர்கள் சென்றதும் அவளும் தனதறைக்கு சென்று ஓய்வெடுக்க ஆரம்பிக்க, சிறிது நேரத்திலேயே வீட்டின் அழைப்பு மணி அடித்தது.
வேலை செய்யவென வீட்டுக்கு வருபவர்கள் வேலை முடிந்ததுமே சென்றுவிடுவர். அதனால் நித்யா அன்று வீட்டில் தனியாக தான் இருந்தார். நுழைவு வாயிலில் நிற்கும் காவலாளி வீட்டுக்கு வருபவர்களை விசாரித்து தான் அனுப்புவார் என்பதால் பயமின்றி அவள் கதவை திறந்தாள்.
அங்கே நாகரீகமாக கோர்ட், டை என்று உடை அணிந்த ஒருவன் நின்றிருந்தான். நித்யா அவனை கேள்வியாக பார்க்கவும்,
"வணக்கம் மேடம், நான் உங்க ஆஃபிஸ்ல வேலைப் பார்க்கிறேன்." என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவன்,
" இன்னைக்கு முக்கிய மீட்டிங் சம்பந்தமான ஃபைல் ஒன்னை சார் வீட்லயே வச்சுட்டு வந்துட்டாராம், அதை என்னை எடுத்துக்கிட்டு வர சொல்லி என்னை அனுப்பினார் மேம்," என்று அவன் வந்த விஷயத்தை சொல்ல,
"அப்படியா? ஆனா மாமா என்கிட்ட எதுவும் போன்ல சொல்லலையே," என்று நித்யா கூறினாள்.
"சார் மீட்டிங்ல பிஸியா இருப்பார் மேம், போன் போட்டு உங்கக்கிட்ட விஷயத்தை சொல்ல கூட அவருக்கு டைம் இருக்காது, அதான் என்னை அனுப்பினார்.
"ஓ, ஆனா எந்த ஃபைல்னு எனக்கு எதுவும் விவரம் தெரியாதே, நான் எப்படி எடுத்துக் கொடுக்க?"
"உங்களுக்கு தெரியாது, அதனால அவரோட ஆஃபிஸ் ரூம் வார்ட்ரோப்ல வச்சிருக்க ஃபைல்