(Reading time: 12 - 23 minutes)
Verena nee iruppin.. Verethum vendame
Verena nee iruppin.. Verethum vendame

"வந்தவன் முக்கியமானதை தன்னோட மொபைலில் போட்டோ எடுத்திருக்கணும் ப்பா, அதான் நித்யாவை தண்ணி கொண்டு வரச் சொல்லி அனுப்பியிருக்கான். ஆனா அவனுக்கு முக்கியமானது எதுன்னு தெரியலையே?" என்றவன்,

நித்யாவை கோபமாக பார்த்து, "நீ உன்னோட மூளையை உபயோகப்படுத்த போறதே இல்லையா நித்தி. முக்கியமானது ரகசியமானதுன்னு தான் அதை வீட்டில் கொண்டு வந்து வைப்பது, அதை நானே எடுத்துட்டு போகாம, ஏன் ஆளை அனுப்பப் போறேன். அப்படியே ஆளை அனுப்பினாலும் உன்கிட்ட போன் செய்து தகவல் சொல்ல மாட்டேனா? அப்படியே நான் சொல்லன்னாலும் நீ என்கிட்ட கேட்க மாட்டீயா?" என்று கேட்க,

"உங்களுக்கு போன் போட்டேன் மாமா, ஆனா நீங்க எடுக்கவே இல்ல, அதான்.." என்று திக்கி திணறி கூறினாள்.

"முக்கியமான மீட்டிங்னு நான் சைலண்ட்ல போட்டிருந்தேன். இன்னும் கூட அதை எடுத்து பார்க்கல, சரி நான் சைலண்ட்ல போட்ருந்தா என்ன? அப்பாக்க்கு போன் போட்டு கேட்ருக்கலாமே, இல்ல ஆஃபிஸ் லேண்ட் லைன் நம்பர் இருக்குல்ல, அதுக்கு பேசியிருக்கலாமே, அதை விட்டிட்டு இப்படி செஞ்சு வச்சிருக்க? இதனால என்ன நடக்க போகுதுன்னு வேற தெரியல," என்று தலையை பிடித்துக் கொண்டு அவன் அமர,

"என்னம்மா நித்யா? கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்திருக்க கூடாதா? எல்லாமே நம்ம கம்பெனியோட சீக்ரெட் ஃபைல்ஸ், இப்போ இதுல எதை தேடி வந்தாங்களோ, அதனால நமக்கு என்ன நஷ்டம் வரப் போகுதோ ஒன்னும் புரியல," என்று ஞானசெல்வம் கூறினார்.

அதற்குள், "பனிரெண்டாவது வரை படிச்சிருக்க, கொஞ்சமாவது ஜாக்கிரதையா நடந்துக்கணும்னு தெரியுதா டீ, இப்படி கவனக்குறைவா இருந்து நஷ்டத்தை வர வச்சிட்டீயே, கல்யாணம் ஆகியாச்சும் உனக்கு பொறுப்பு வரும்னு பார்த்தா, ஏன் டீ இப்படி இருக்க?" என்று வஞ்சி அவளை திட்டினார்.

"சரி ஆளாளுக்கு இப்படி இவளை திட்றதால ஏதாவது மாறிட போகுதா? வந்தவன் யாரு? எதுக்காக வந்தான்னு கண்டுபிடிங்க? நம்ம முருகன் நம்மள கைவிட மாட்டார். நமக்கு இதால எந்த பிரச்சனையும் வராது. ஆகற வேலையை பாருங்க," என்று குறிஞ்சியம்மாள் பேத்திக்கு ஆதரவாக பேசினார்.

"வா கார்த்திக், போலீஸ்ல போய் ஒரு கம்பெளியிண்ட் கொடுத்திட்டு, இந்த வீடியோவை காட்டி ஆளை கண்டுபிடிக்க சொல்வோம்," என்று ஞானசெல்வம் சொல்லவும், கார்த்திக் அவரோடு புறப்பட்டான். வஞ்சி வேறு அடிக்கடி நித்யாவை திட்டிக் கொண்டிருந்தார். அவளுக்குமே

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.