(Reading time: 18 - 35 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

அமைதி விரும்பியாக இருந்தான்.  பதட்டமான சூழலோ.. ஆர்பாட்டமான  நடவடிக்கைகளோ… தலைவலியை கிளப்பும் ஓசைகளோ… இருக்கக் கூடாது. அது அது அப்படி அப்படியே இருக்கணும்… ப்ரொஸுஜர்படி நடக்கணும். நோ யூ டர்ன்… டேக் டைவர்ஸன்… ஸ்பீட் ப்ரேக்கர்ஸ்…!

அதனால்தான் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பதே தெரியாத ஆதிமனித வாழ்க்கையை அவன் விரும்பவில்லை. ஆனால் மனம் விரும்பியபடியேவா வாழ்க்கை இருக்கும்?

“வாங்க தம்பி. வாம்மா அதிதி… அங்கே எல்லோரும் நலமாக இருக்கிறீர்களா? ” என்று அவனையும் அதிதியையும் வரவேற்றார் மாரப்பன்… ஊர் தலைவர். தாத்தாவின் வீட்டையும் நிலத்தையும் அவர்தான் பராமரித்து வருகிறார்.

“நன்றாக இருக்கிறார்கள். உங்கள் நலம் விசாரித்ததாக அப்பாவும் அம்மாவும் சொல்ல சொன்னார்கள்”

“எனக்கென்னப்பா நான் நல்லாதான் இருக்கிறேன். உங்களுக்கு வீடு தயாராக இருக்கு. அதிதியின் தாத்தா வீட்டை சுத்தம் செய்து வைத்திருக்கிறேன். பத்து நாட்களுக்கு தங்கத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து வைத்திருக்கிறேன். நீங்கள் நகர்புறத்தை சேர்ந்தவர் அங்கிருக்கும் வசதிகள் இங்கு இருக்காது.”

“இது இண்டர்நெட் காலம் சார். கிராமம் நகரம் எல்லாமே ஒன்றாகத்தான் தெரிகிறது. அன்றாட உலகத்துடன் தொடர்பில் இருக்க முடிகிறது.  கிராமத்தில் இருப்பதால் இன்னும் கூடுதலாக சுத்தமான காற்று.. தண்ணீர் இவற்றை அனுபவிக்க முடிகிறது.” 

“ஆமாம் தம்பி… இங்கேகூட சில பொருட்களை போன்றவற்றை செல்போனிலேயே ஆர்டர் செய்து விடுகிறார்கள். அவர்களும் எப்படியாவது கொண்டு வந்து தந்து விடுகிறார்கள். போன வாரம்கூட … சரி சரி விட்டால் நான்பாட்டுக்கு பேசிக் கொண்டே இருப்பேன். நீங்க கிளம்புங்க”

“ நான் கிளம்பறேன்.. ஆனால் போன வாரம் என்னவானது என்பதை சொல்லி விடுங்கள்.”

“அது ஒன்னும் இல்லை. அதோ தெரியற மலையில் ஒரு குன்று பகுதியில் ஒருத்தர் குடி இருக்கார். கொஞ்சம் வசதியானவர்தான். அவர் எதையோ ஆர்டர் செய்துட்டார். அந்த கம்பெனிகாரங்களும் பொருளை அனுப்பிட்டாங்க. ஒரு மலையேறும் கோவேறு கழுதையை பிடித்து ஆளை ஏற்றி அதனை அனுப்பியும் வைத்து விட்டார்கள்.”

“அப்படியா…?” அதிரதனுக்கு அவர் சொன்ன விசயத்தில் மனம் லயிக்கவில்லை. மலை மீது குடியிருக்கும் தனியொருவர் பற்றிதான் யோசனை வந்தது. யார் அவர்? ஏன் அங்கிருக்கிருக்கிறார்?

அவன் அதிதியுடன் வீட்டை நோக்கி  நடந்தான். தலைவர் சொன்னதுபோலவே அந்த வீட்டில்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.