(Reading time: 18 - 35 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

சாப்பாடு அருமையாகவே இருந்தது.

“இந்த ஊர் அழகாக இருக்கிறது. நான் சுற்றி பார்த்து விட்டு வருகிறேன்” என்று கிளம்பினான்.

“இது ஒன்றும் பெரிய ஊர் இல்லை. அரை மணி  நேரத்தில் சுற்றி பார்த்து விடலாம். ரொம்பவும் நடந்தீர்களானால் காட்டிற்குள் சென்று விடுவீர்கள்”

“நான் ஊரை கையில் வைத்து சுற்றி பார்க்கப் போவதில்லை. இயற்கையை அனுபவித்து மெல்ல  நடந்து போகப்போகிறேன்” என்றான்.

“ஓ” என்று சொன்ன அதிதி தன் வேலையில் மும்முரமானாள்.

வெளியே வந்து பார்த்தபோதுதான் புரிந்தது அது ரொம்பவும் சின்ன ஊர். கிழக்கு பகுதியில் புளிய மரத்தருகே ஆரம்பித்த ஊர்  மேற்கு பகுதியில் வனப்பகுதியில் முடிவடைந்தது. இவ்வளவு அருகே இருந்தும் வன விலங்குகள் ஊருக்குள் வருவதில்லையா?

“வாங்க மாப்பிள்ளை, பொண்டாட்டி ஊருக்கு விருந்து கொண்டாட வந்தீங்களா?” என்ற குரல் கேட்டு திரும்பினான். குரலில் மட்டுமல்ல முகத்திலும் உடல் மொழியிலும் கேலி பரவியிருக்க ஒரு பெண்மணி நின்றாள்.

“நீங்க யாருன்னு எனக்கு தெரியலையே?”

“எனக்கும் தெரியாது. தெரிஞ்சிருந்தா விசயத்தை உங்கள்ட்ட சொல்லியிருப்பேன். இந்த கல்யாணமே நடந்திருக்காது”

“அதிதியின் கல்யாணத்தையே  நிறுத்தும் செய்தியை வைத்திருக்கும் உங்களை யார்னு தெரிஞ்சுக்கலாமா?”

“நான் அஞ்சலை. அந்த பொண்ணோட சித்தி. அதாவது அவ்ளுடைய அப்பாவின் தம்பி சம்சாரம்”

“சரி… அந்த விசயம் என்ன?” அந்த பெண்மணிக்கு முன் அதிதியை விட்டு தரக் கூடாது என்ற எண்ணம் அவனுக்குள் தோன்றி இருந்தது. அந்தம்மா விசயத்தை சொன்ன உடன்…. அது எதுவாக இருந்தாலும்… எனக்கு தெரியுமே என்று சொன்னால் சரியான மூக்குடைப்பாக இருக்கும் அல்லவா?

“இப்போ தெரிஞ்சு என்ன ஆவப் போகுது?”

“சரி விடுங்க. நான் கிளம்பறேன்”

“இருங்க. அந்த பொண்ணுகிட்ட கவனமாக இருங்க. அந்த குடும்பமே சரியில்லாதது. அவளுடைய அம்மாபோல அதிதியும்…” தேவ ரகசியம்போல இழுக்க,

“எனக்கு துரோகம் செய்துடக் கூடாது. அப்படித்தானே. நான் பார்த்துக்கறேன்.”

“உங்களுக்கு தெரியுமா?” ஆச்சரியமான பார்வை அவனை யோசிக்க வைத்தது. மகள் போல

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.