(Reading time: 18 - 35 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

தேவையான வசதிகள் இருந்தன. சமையலறையை பார்த்த அதிதி,

“நல்லவேளை… சமையல் பொருட்களையும் வாங்கி வச்சுட்டாங்க. இனி நான் சமைக்கலாம். உங்களுக்கு சாப்பாடு பிரச்சினை இல்லை”

“ஆமாம்… சா…ப்பா…ட்டுக்கு  பிரச்சினை இல்லை”

“மத்த பிரச்சினைகள் அப்படியே இருக்குன்னு சொல்றீங்க. அதுவும் சரியாகிடும்.” சொல்லி கொண்டே சமையலறைக்குள் சென்றாள். மதிய உணவிற்கான சமையலை ஆரம்பித்தாள். கைகள் பழகிய வேலையை தானாக செய்ய, மனம் தன் போக்கில் சிந்திக்கலாயிற்று.

அவளுக்குள் ஒரு எண்ணம் இருந்தது. அந்த கோர்ட் ஆர்டர்படி  நடந்தும் இருவருக்கும் மனமாற்றம் ஏற்படவில்லை எனில் என்ன செய்வார்கள்? பிரித்து வைக்கத்தானே வேண்டும்!. அவ்வாறுதான்  நடந்தாக வேண்டும். அவர்களுடைய மண வாழ்க்கையை தொடர வைக்க மாட்டாள்.

முன்பாவது அதிரதன்  மேலிருந்த ஒரு  நல்ல எண்ணத்திற்காக விவாகரத்து கேட்டாள். அவள் விலகி சென்றபின் நல்ல பெண்ணை பார்த்து திருமணம் செய்து கொள்ளட்டும் என்று நினைத்தாள். ஆனால் அவன் அந்த கவுன்சலர் முன் ‘ஜெனிட்டா’ என்று உச்சரித்ததை கேட்டபின் அவளுடைய முடிவில் உறுதியானாள்.

அப்போது அவன் முகத்தில் தெரிந்த அந்த வேதனையை அவள் மனம் புகைப்படம்போல பதிய வைத்துக் கொண்டது. பிற்பாடு அவள் தனித்திருந்த சமயத்தில் ‘ஜெனிட்டா’ பற்றி யோசித்தாள். யார் அவள்?

அதிரதனின் மனம் கவர்ந்தவளா? அவனை விட்டு விலகி விட்டாளா? விலக்கி வைக்கப்பட்டாளா? ஒருவேளை அவள் அவனுடைய காதலியாக இருந்தால் அவளை அவனிடம் கொண்டு வந்து சேர்ப்பது அவள் பொறுப்பு! அதுதான் அவனுடைய எதிர்காலத்திற்கும் நல்லது. இதுபற்றி எப்படி அவனிடம் விசாரிப்பது?

ஏனெனில் அந்த ஜெனிட்டாவை பற்றி மகிமாவிற்கும் தெரியவில்லை. நேரடியாக கேட்காமல் யாரையோ சொல்வதுபோல ஜெனிட்டாவின் பெயரை உச்சரித்து செக் செய்தாள். மகிமாவிடம் ரியாக்ஸனே இல்லை. அந்த பெயரில் யாரையாவது தெரியுமா என்றும் கேட்டு பார்த்தாள். இல்லை என்ற பதில்தான் கிட்டியது. எனவே அந்த ஜெனிட்டா அதிரதனுக்கு மட்டுமே தெரிந்த வாழ்க்கை ரகசியம் என்று முடித்து விட்டாள். இனி அவளாகதான் அதிரதனிடமிருந்து விசயத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு நினைத்துக் கொண்டே சமையலையும் முடித்த அதிதி  கணவனை உணவருந்த அழைத்தாள். அவளுடைய சமையலில் குறை எதுவும் இதுவரை கண்டறியாத அதிரதனுக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.