(Reading time: 18 - 35 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

“அப்போது உனக்கு எத்தனை வயசிருக்கும்?”

“எட்டு வயது… அக்காவிற்கு பத்து வயதிருக்கும்…”

“அந்த ஆள் யார்?”

“அந்த அங்கிள் அப்பாவுடைய சினேகிதர்தான். அப்போதே அங்கிருந்து போயிட்டான்.”

அவனால் இந்த கதையில் மறைந்திருந்த உண்மையை உறுதி செய்ய முடியவில்லை. ஏனெனில் அவனால் அதிதியின் அம்மா துளசியை தவறாக நினைக்க முடியவில்லை. அவர் அம்மாவின் தோழி என்பது தெரியும். இது போன்ற தரமில்லாதவர்களிடம் அம்மா நட்பு கொள்ள மாட்டார்கள் என்பதும் தெரியும். என்னதான்  நடந்திருக்கும்?

ஒருவேளை  நம்பிக்கை துரோகத்திற்கு அப்பாற்பட்ட வேறு ஏதாவது ஒரு காரணம் இருந்தால்…  அது அதிதியின் அம்மா பற்றிய தவறான எண்ணத்தை திருந்தலாம்… அது அவளுடைய எதிர்காலத்தை மாற்றியமைக்கவும் செய்யலாம் என்று நம்பினான்.

சொல்லப் போனால் எட்டு வயதிலிருந்தே அதிதி இந்த சம்பவத்தினால்    பாதிக்கபட்டிருக்கிறாள். அம்மா… அப்பா… அக்கா என்று அவளை சுற்றி இருந்த அழகான குடும்பத்தை இழந்திருக்கிறாள்.

“அதிதி… இதை வைத்துதான் நீ விவாகரத்து கேட்டாயா?”

“ஆமாம், நானும் என் அம்மாவைப்போல  நடந்து கொண்டால்…”

“அது எப்படி நடக்கும்?. உண்மையான அன்பு ஆழமான நம்பிக்கை இருந்தால் இது போன்ற விசயங்கள் எப்படி நடக்கும்?

“அன்பு… பாசம்… நம்பிக்கை அத்தனையும் எங்களிடமும் இருந்தது சார். அம்மாவிற்கு அப்பாவிடம் பிரியம் அதிகம். அப்பாவிற்கு அம்மாதான் எல்லாமே. நாங்க ரெண்டு பேரும்தான் அவர்களுடைய உலகம். அவ்வளவு சந்தோசமாக வாழ்ந்திருந்தோம்…” கண்களில் கண்ணீர் வர தொடங்கியது.

“ஒரு புயல் வீசியதுபோல ஒரே நாளில் என் குடும்பம் அழிந்து போனது. நான் மட்டும் பாவி…. அவர்கள்  இல்லாமல் உயிருடன் இருந்தேன். எவ்வளவு மோசமான நாட்கள் அவை”

“இந்த தாத்தா….?”

“அவர் அப்பாவுடைய அப்பா. அவரும் எங்களுடன்தான் இருந்தார். ஆனால் அந்த சம்பவம்  நடந்த சமயத்தில் வடநாட்டிற்கு யாத்திரை போயிருந்தார்.”

“ஓகே அதிதி… இப்போதைக்கு இதைபற்றி பேச வேண்டாம். பிறிதொரு நாள் இதைபற்றி கண்டிப்பாக பேசுவேன். சில விசயங்களை விளக்க நினைக்கிறேன்” என்று அத்துடன் அந்த

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.