(Reading time: 13 - 25 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

தொடர்கதை - காணாய் கண்ணே - 40 - தேவி

விழாவையும், மீனா பஜார் என்ற கடைத் தெருவையும் பார்த்து வரச் சென்ற கிரண் தேவி, அந்தச் சுரங்கப் பாதையினுள் மாட்டிக் கொண்டாலும், தைரியமாகவே இருந்தாள்.

இந்த மீனா பஜார் என்ற இடம் பதேபூர் கோட்டையில் இருந்து அதிக தொலைவு தான். அதிகாலையில் கிளம்பியவர்கள் உச்சிக் காலத்திற்குச் சற்று முன் தன் வந்து சேர்ந்து இருந்தனர். இத்தனை தூரத்தில் சுரங்கப் பாதை இருப்பது ஏதோ காரணமாகத் தான் என்று புரிந்து கொண்டாள்.

சுரங்கப் பாதை என்றால் அதற்கு என்று சில வரைமுறைகள் வைத்துதான்

உருவாக்கி இருப்பார்கள். அதை நினைவுப் படுத்திக் கொண்டாள். ராணாவோடு சுற்றியதால் அனேக விஷயங்கள் அவளுக்குப் பரிச்சயமே.

அதன்படிப் பார்த்தால் இந்தச் சுரங்கம் ஆபத்துக் காலத்தில் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தப்பித்துச் செல்வதற்காக ஏற்படுத்தப் பட்டது என்றுப் புரிந்து கொண்டாள். சுரங்க விதிகளின் படி கிரண் தேவி இறங்கியது பதேபூர் சிகிரி ஊரை விட்டுத் தள்ளி இருக்கும் காடு என்றும் இல்லாமல் , மலைப் பாங்கான இடம் என்றும் இல்லாத இரண்டும் கலந்த பகுதி. இதன் ஆரம்பம் ஏதோ ஒரு அரண்மனைக்குள் தான் இருக்கும் என்ற யூகம் இருந்தது.

அதனால் எச்சரிக்கையுடன் தான் என்றாலும் தைர்யமாகவே அந்தப் பாதையில் சென்றாள்.

அந்தச் சுரங்கம் அவளை கவர்ந்தது. வெறும் பாறைகளும் , வெளிச்சத்திற்கு தீப்பந்தமும் மட்டுமில்லாமல், அங்கே அங்கே இயற்கை வெளிச்சம் வரும் படி வேலைப்பாடு இருந்தது. அத்தோடு வழி மாறமால் இருக்க ஏதோ குறியீடு போலவும் இருந்தது.

சுரங்கத்தில் முதல் திருப்பத்தில் கட்டம் போன்ற ஒரு அமைப்பு வரையப்பட்டு இருக்க, அடுத்த திருப்பத்தில் அந்தக் கட்டங்கள் இரண்டாக இருந்தது. அப்படியே கட்டங்கள் அதிகரித்துக் கிட்டத்தட்ட இருபது கட்டங்களோடு முடிந்தது. அந்த இருபதுக் கட்டங்கள் சேர்ந்ததும் ஓர் இசைக் கருவியின் வடிவத்தைக் காட்டியது.

தனித்தனியாகப் பார்க்கும் போது அதை யாராலும் யூகிக்க முடியாது. அதே சமயம் கடைசி கட்டங்கள் வரும் வரை எங்கே என்றாலும் வழி மாறிவிடவும் வாய்ப்பு இருந்தது. கிரண் தேவிக்கு எந்தச் சுரங்கத்திலும் இதைப் போன்ற ஒரு தடயம் இருக்கும் என்பது தெரியும். முதல் இரண்டு , மூன்று திருப்பங்களிலேயே அதைக் கண்டு கொண்டாள். அதைப் பின்பற்றியே கடைசித் திருப்பத்திற்கு வந்து விட்டாள்.

அதற்குப் பின் வெளியே செல்ல அந்த வழியும் இல்லை. அவளின் முன் புறம் முழுதும் பாறைச் சுவர்களாகவே இருந்தது. கிரண் தேவியும் கைகளால் அங்கே அங்கே தடவிப்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.