(Reading time: 13 - 25 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

“அதற்கு அவர்கள் ஒத்துக் கொள்வார்கள் என்று எப்படி எண்ணுகிறீர்கள்?

“ஏன் ஜோதாவும் அவரின் சகோதரன் மகள் தானே. அவளைத் திருமணம் செய்ததற்காக நம் மீது பாய்ந்து விட்டார்களா என்ன?”

“ஜோதாவின் தந்தைக்கும் ரானாவிற்கும் ஆரம்பத்தில் இருந்தே பகை இருந்தது. என்றாலும் ராஜபுத்திரர்கள் முஹலயர்களோடு திருமணத் தொடர்பு வைக்கக் கூடாது என்று சில முறைகள் தூது அனுப்பியதாகக் கேள்விப்பட்டேன். பகைவராக எண்ணியவருக்கே அப்படி என்னும்போது, அவரின் வளர்ப்பு மகளுக்கு விட்டு விடுவாரா என்ன?”

“என்னவாக இருந்தாலும், அவளை நான் எடுத்துக் கொண்டு விட்டால், அவர்கள் இறங்கி வந்துதானே ஆக வேண்டும்”

“அப்படியாவது அந்தப் பெண் எதற்கு அரசே. தாங்கள் விரலசைத்தால் தங்களை நோக்கி வரும் எத்தனையோ அழகிகள் அந்தப் புறத்திலும், தங்கள் மனம் குளிர , தங்களோடு அரியணைக்குப் பொருத்தமான ராணிகளும் இருக்க, இப்படித் தேவையா அரசே?

“அத்தனை அழகிகளும், அவள் போல் இல்லையே” என்றுக் கூறும்போது  அவர் கண்களில் வழிந்த காமமும், கயமையும், பஹீருக்குக் கவலை ஏற்படுத்தியது.

பல தார மணங்கள் அரசரும், அதிகாரிகளும் செய்து கொண்டிருந்த காலம் தான். விரும்பியும், வற்புறுத்தல் காரணமாக என்றும் எல்லாம் கலந்தே நடந்து கொண்டு இருந்தது.

ஏனோ பஷீருக்கு இதில் , குறிப்பாக உளவு பார்க்க வந்தப் பெண்ணை என்பதில் சற்றும் உடன்பாடில்லை. அதை எவ்வாறு வெளிப் படுத்த முடியுமோ அதைச் செய்துக் கொண்டு இருந்தார்.

ஆனால் அக்பரின் மோகம் , பஷீரின் அறிவுரைகளைக் கேட்கவிடவில்லை. இனி எந்தப் பயனும் இல்லை என்று உணர்ந்தவர்,

“அரசே, தற்போது அந்தப் பெண்ணை என்ன செய்து இருக்கிறீர்கள்?” என்றுக் கேட்டார்.

“என் வேலைக்காரி மூலமாக நம் மீனா பஜார் சுரங்கப் பாதையில் விட்டு இருக்கிறேன்”

“ஓ” என்று மட்டும் பதில் கொடுத்தார்.

அக்பர் “அந்தப் பெண்ணின் பெயர் கிரண் தேவி போலே. என்ன அழகான முகம் . தீர்க்கமான கண்கள். வேவு பார்க்க வந்தவள் போல் வேஷம் போட்ட போதே அத்தனை அழகாக இருந்தாள் எனில், அவள் என் நாயகியாக அலங்கரித்து நின்றால் எப்படி இருக்கும்?” என்று தன் போக்கில் பேசிக் கொண்டு இருந்தார்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.