(Reading time: 13 - 25 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

“திரையின் பின் நிற்கும் காரிகையே . வெளியே வரலாம்” என்றார்.

அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கிரண் தேவி தன் முகத்தில் எதையும் காட்டாமல் வெளியே வந்தாள். அவளைப் பார்த்து

“அக்பரின் கோட்டைக்குள் நுழைந்த இந்த புள்ளி மானுக்கு அக்பரின் பணிவான வணக்கங்கள்” என்றுக் கூற, கிரண் தேவி எந்தப் பதிலும் சொல்லவில்லை. முகத்தில் எந்த பிரதிபலிப்பும் காட்டவில்லை.

அவளின் பதிலை எதிர்பார்த்த அக்பர் அவள் எதுவும் பேசாமல் இருக்கவும்,  மீண்டும் தானே பேச ஆரம்பித்தார்.

“மகாரானாவின் பிரியத்திற்குறிய மகள் உதய்பூர் இளவரசி கிரண் தேவிக்கு , இந்த சாமானியன் அக்பரின் கோட்டைக்குள் என்ன வேலை என்றுத் தெரிந்து கொள்ளலாமா?”

மகாரானாவின் பெயரைச் சொல்லவும், கிரண் தேவி திடுக்கிட்டு விட்டாள். அதிலும் கிரண்தேவியின் பெயரைச் சொல்லி , அவளின் அரசைப் பற்றிச் சொல்லவும் மெலிதான பயம் கூட வந்தது. ஆனாலும் அதைக் காண்பித்துக் கொள்ளாமல், அப்போதும் கிரண் தேவி அமைதியாகவே நின்றாள்.

மெதுவாக கிரண் தேவியின் அருகில் வந்த அக்பர் அவளை ஒருமுறைச் சுற்றி வந்தவர்,

“அழகின் பிறப்பிடமே.       உன்னைப் போன்ற அழகிகள் என் அந்தபுரத்தில் இதுவரை இல்லை. என் வாழ்க்கையை அலங்கரிக்க நீ என்னோடு அந்தபுற நாயகியாக இரு” என்றுக் கூற,

“அது இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல இன்னும் எத்தனை ஜென்மத்திலும் நடக்காது பேரரசரே” என்றாள் கிரண் தேவி.

“ஏன்? தற்போது நீ நின்று கொண்டு இருக்கும் இடம் எது தெரியுமா? இந்த அக்பரின் கோட்டை. இங்கிருந்து ஒரு சிறு துரும்பு வெளியே செல்ல வேண்டும் என்றாலும் இந்த அக்பர் நினைக்காமல் நடக்காது”

“என்னால் வர முடிந்ததே அரசரே”

“அது நீயாக வரவில்லைப் பெண்ணே. நான் உன்னை வரவழைத்தேன்”

அது உண்மைதானே என்று உணர்ந்து கொண்டாள் கிரண் தேவி. அந்த முதியவள் வந்து உதவும்படிக் கேட்கவில்லை என்றால் இவள் அந்த வீட்டின் அருகே சென்று இருக்க மாட்டாளே. எனில் இந்தத் திட்டம் அக்பருடையதா என்று யோசனையோடுப் பார்த்தாள்.

“ஆம் பெண்ணே. என் திட்டப்படி தான் நீ இங்கே வந்தது. ஆனால் உன்னை இத்தனை

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.