(Reading time: 13 - 25 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

பஹீர் “தாங்கள் அவளைச் சந்திக்கும் வாய்ப்பு இருந்து இருக்காதே அரசே?” என்றுக் கேட்டார்.

“ஜோதாவின் அரணமனையிலேயே அவளைப் பார்த்து விட்டேன். ஆனால் முகம் மறைத்து இருந்தாள். இன்றைக்கு மீனா பஜாருக்குச் சென்றப் போது முகத்தையும் பார்த்தேன்”நான்

“மீனா பஜாருக்குச் சென்றீர்களா? ஆண்கள் செல்லக் கூடாது என்பது தங்களின் கட்டளையே. அதைத் தாங்களே மீறலாமா?”

“ஹ. ஹ. அந்தக் கட்டளை இட்டதே , அங்கே பார்க்கும் அழகிய பெண்களை என் அந்தப்புறத்தில் சேர்த்துக் கொள்ளத்தானே.”

“இது தவறு இல்லையா அரசே?

“அரசனின் விருப்பே முக்கியம் பகிர். “

பகிர் ஏதும் பேசவில்லை. ஆனால் ஏனோ அக்பர் அன்றைக்கு நிறுத்தாமல் பேசிக் கொண்டு இருந்தார்.

“இந்த மீனா பஜாருக்கு நானும் , என் மெய்காப்பாளனும் பெண்கள் உடையில் செல்வோம். எனக்குப் பிடித்தப் பெண்ணை நான் கண் காண்பிக்க, அவன் சாம, தான , பேத தண்டத்தை பயன் படுத்தி என்னில் சேர்ப்பான்”

பஹீருக்கு மிகவும் வருத்தமாகி விட்டது. என்னதான் அக்பரின் கீழ் வேலை செய்பவர் என்றாலும், இந்த மாதிரி விஷயங்கள் அவருக்குப் பிடித்தம் இல்லை. அவரின் இல்லப் பெண்களும் அந்த விழாவிற்கு அழகாக உடுத்திச் சென்றது நினைவு வந்தது. அவரைப் போல் இன்னும் எத்தனைப் பேரோ ? அரசனே இப்படி என்றால் , யாரிடம் முறையிடுவது என்றுத் தெரியவில்லை.

பஹீர் பேசாமல் இருந்தார். அவரின் மௌனத்தைக் கண்ட அக்பர் ஏறிட்டுப் பார்க்க, அவர் தலைக் குனிந்தார்.

‘என்ன பஹீர்? என்ன சொல்ல நினைக்கிறாய்?”

“இதுவரை தாங்கள் விருப்பத்தையும், உத்தரவையும் மீறி நான் சென்றதில்லை. ஆனால் தற்போது தாங்கள் மிகப் பெரியத் தவறு செய்து இருக்கிறீர்கள் என்று மட்டும் புரிகின்றது”

“தவறு சரி பற்றி எனக்குக் கவலை இல்லை. என் விருப்பமே எனக்கு முக்கியம்”

“இதற்கு மேல் நான் சொல்ல ஒன்றும் இல்லை. எனினும் எச்சரிக்கையாக இருங்கள். நான் வருகிறேன்” என்று விட்டு பகிர் சென்று விட்டார்.

அவர் சென்று கதவு மூடும் வரை பேசாமல் இருந்த அக்பர், அவர் சென்றதும்,

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.