(Reading time: 13 - 26 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

உதவியாட்கள் கூறிய செய்தில் மகிழ்ந்தவன், கிருத்திகா பேராசிரியர் துணை வர அவனின் ரகிசய வீரர்கள் சகிதம் புறப்பட்டனர்.

டெல்லியில் இருந்து ஆக்ரா செல்லும் வழியில் ஒரு சிறு கிராமத்தில் நுழைந்து நின்றது அந்தக் கார்,

அங்கே கிருத்திகாவை கண்ணைப் பொத்தி அழைத்து வந்தர்வர்கள் , செல்வத்திடம் காரையும், கிருத்திகாவையும் குறித்து மேலும் ஏதோ சொல்ல வர, அவர்களை தலையசைத்து வெளியே அனுப்பி வைத்தான்.

கிருத்திகாவிற்கு நினைவு வரவும், கண்களைத் திறந்துப் பார்க்க, அங்கே செல்வம் நின்றுக் கொண்டு இருந்தான்.

“ஹ. ஹ. ஒருவழியா உன்னை நான் கடத்திட்டேன். இனிமேலாவது என்னைப் போன்ற பணக்காரகளின் பிள்ளைகளைச் சீன்டாதே” என்றுக் கூறிக் கொண்டு இருந்தான்.

“யார்? நானா மட்டுவேனா? ஹ . ஹ எவ்ளோ பிளான் பண்ணி இந்த வேலை செய்து இருக்கேன்? நீ அப்படியே பகல் கனவு கொண்டு இரு” என்றபடி சிரித்துக் கொண்டு இருந்தான்.

மேலும் “என்னுடைய நோக்கம் நீ அல்ல. ஆனால் நீயும் தான்”  என்றுக் கூறவும் அவன் கூறியது புரியாமல் விழித்துக் கொண்டு இருந்தாள் கிருத்திகா.

கிரண் தேவி காணவில்லை என்று அக்பரிடம் கூறியதும், எல்லோரையும் தேடச் சொல்லிவிட்டு, ப்ரித்வியிடம் மட்டும் அவள் எங்கே காணமல் போனாளோ என்ற விவரம் வாங்கிக் கொண்டு, இளவரசனையும் அங்கேயே வரச் சொல்லி தேடுதல் வேட்டை நடத்தினார்.

கிரண் தேவியைத் தேடிச் சென்ற இளவரசன் அந்த மீனா பஜாரையே சுற்றி சுற்றி வந்துப் பார்த்தான். அவன் கண்களுக்கு சந்தேகத்தைத் தோற்றுவிக்கும் எந்தப் பொருளையும் ஆராய முற்பட்டான். ஆனால் அதிக நேரம் அதில் செலவழிக்க முடியவில்லை.

இளவரசன் செய்வதை எல்லாம் அக்பர் பார்த்துக் கொண்டும் அறிந்து கொண்டும் இருக்கிறார் என்பதை இளவரசன் நன்கு உணர்ந்து இருந்தான்.

ராணி ஏன் வெளியே வரவில்லை? அவள் ஏதோ சுரங்கத்திற்குள் அகப்பட்டு விட்டாள் என்று மட்டும் புரிந்து கொண்டான். அக்பரை ராணி சந்தித்தது இருப்பாள் என்றும் இளவரசன் எதிர்ப்பார்க்கவில்லை.

அவனின் எண்ணம் முழுதும் , ராணி எந்த நிலையிலும் பிடிபட்டு விடக் கூடாது என்பது மட்டுமே.

சற்று நேரத்தில் அக்பர் ப்ரித்வியை அழைத்து,

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.