(Reading time: 13 - 26 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

அதுவரைப் பேசாமல் இருந்தக் ப்ரித்வி.,

“என்ன ஆச்சு? ராகவி? எதுவும் ப்ரோப்ளேமா?” என்றுக் கேட்கவும், ராகவி கிருத்திகா காணாமல் போன விவரத்தைக் கூறினாள்.

“வாட்? காணுமா? ரெண்டு பேரும் சேர்ந்துதானே சுத்திக்கிட்டு இருந்தீங்க? இப்போக் காணும் னா என்ன அர்த்தம்?” என்றுக் கேட்டான்.

ராகவி பதில் சொல்ல முடியாமல் தவிக்கவும், சற்று சினத்தைக் குறைத்துக் கொண்டான். அவளையும் அழைத்துக் கொண்டு அவர்கள் பேராசிரியர்கள் இடத்தில் நிறுத்தி விவரங்களைச் சொல்லச் சொன்னான்.

அவளும் பயத்தோடு சொல்லவும், பேராசிர்யர்கள் இருவருக்கும் சரியானக் கோபம் வந்தது. மாணவர்களை அடிப்பது எல்லாம் குற்றம் என்ற அளவில் வந்து நின்றப் பிறகு ஆசிர்யர்கள் பேசுவதுக் கூடப் பார்த்து பேச வேண்டியக் காலக் கட்டத்தில், ராகவியை அவர்கள் முடிந்த மட்டும் முறைத்தனர். பின் ப்ரித்வியிடம் திரும்பி,

“மிஸ்டர் . ப்ரித்விராஜ் உங்கப் பொறுப்புத் தானே எங்களைப் பத்திரமா அழைச்சுட்டுப் போறது. எங்கள் மாணவர்களில் ஒருத்திக் காணவில்லை எனபது எத்தனைப் பெரியக் குற்றம் தெரியுமா? இதற்கு என்னப் பதில் சொல்லப் போகிறீர்கள் ? “

என்றுக் கட் அன்ட் ரைட்டாகப் பேசினார்கள். ப்ரித்வி தன் அடையாள அட்டையைக்  காண்பித்து அவர்களை அடக்கி இருக்க முடியும். ஆனால் அவரின் நிலையில் இருந்து அவரின் தவிப்பு புரிந்துக் கொண்டான்.

“சார், நான் சொல்றதக் கொஞ்சம் கேளுங்க. என் பிரெண்ட் ஒருத்தங்க இங்கே டெல்லியில் உயர் அதிகாரிகளாக இருக்கிறார்கள். அவர்களிடத்தில் சொல்லித் தேட ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் இங்கு பதட்டப் படாமல் இருந்தால் தான் , என்னால் மற்ற வேளைகளில் உதவிட முடியும்” என்றக் கூறவும், அதனை ஒத்துக் கொண்டவர்கள் மற்ற மாணவர்களை அழைத்துக் கொண்டு தங்கும் விடுதிக்கு அனுப்பி வைத்தனர்.

ஒரு பேராசிரயர் மட்டும் ப்ரித்வியோடு இருக்க, ப்ரித்வியின் மற்ற உதவியாளர்கள் இங்கே கவனித்துக் கொண்டனர்.

எல்லோரும் சென்றதும் நேராகச் சென்றது அந்தத் திருப்பங்கள் நிறைந்த இடத்தைதான். ப்ரித்வி மனதிற்குள் இந்த இடத்தில் இருந்து பின் பக்கமாக நடக்கச் சொன்னால், இவள் எதிர்பக்கம் நடந்து இருக்கின்றாள் என்றுக் கிருத்தியைத் திட்டினான்.

எந்தத் திசையில் போயிருப்பார்கள் என்று யோசித்துக் கொண்டு இருந்தபோது, அவனின்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.