(Reading time: 14 - 28 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

தொடர்கதை - காணாய் கண்ணே - 46 - தேவி

காராணா பிரதாப் சிங் தன் உற்ற தோழனான சேத்தக் நிலைமையைக் கண்டு கண்ணீர் வடித்தார். மற்ற தளபதிகளின் வலியுருத்தலில் போர் நடக்கும் இடத்தை விட்டுக் கிளம்பினர்.

சேத்தக் தன் முடியாத நிலையிலும் ராணாவின் எண்ணங்களை உணர்ந்துக் கொண்டு அவரை தன் மேல் ஏற்றி போர்க் களத்தை விட்டுச் சீறிப் பாய்ந்தது.

ராணா கிளம்பும் முன் அவர் அருகில் வந்த அவரின் சகோதரர் மான்சிங்

“ராணா மகாராஜ்” என்ற அழைக்க, அதில் வியந்துப் பார்த்தார்.

ஆம். மான்சிங் ராணாவிற்கு எதிராகச் சென்றக் காரணமே அதிகாரப் போட்டித் தான். இவர்களின் தந்தை உதய் சிங்கிற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகள். எல்லோருக்கும் பிள்ளைகள் இருக்க , உதய் சிங்கிற்கு ராணாவின் மேல் அதிக பாசம் மற்றும் நம்பிக்கை.

சித்தூர்க் கோட்டைப் போரில் ஏற்பட்ட மிகப் பெரிய தோல்வி மற்றும் அப்போது ஏற்பட்ட ராஜபுத்திரப் பெண்களின் கூட்டுத் தீக்குளிப்பு இரண்டிற்கும் சரியான பதிலடிக் கொடுக்க ரானாவால் மட்டுமே முடியும் என்று எண்ணினார்.

அவரின் உதய்பூர் ராஜ்யத்தை ராணாவிடம் கொடுக்க,  மான்சிங்கிற்கு ராணாவின் மேல் பகை ஏற்பட்டது. அதனால் ராணாவிடமிருந்து பிரிந்து சென்று தனி சிற்றரசாகினார்.

தங்களுக்குள் இருக்கும் போட்டிப் பொறாமையால் அந்நிய தேசத்தினர் நம் நாட்டினரை அடிமைபடுத்துவதைத் தடுக்க ஒற்றுமையாகப் போரிடவில்லை.

இதன் விளைவு அனேக உயிர்கள் பலி, அதிலும் பெண்கள் பலி என்பது பெரும் வேதனையை ஏற்படுத்தியது. அத்தோடு நம் மண்ணின் கலாச்சாரங்களை சீரழிக்கும் வகையில் கோவில்களை இடித்தல், அதன் சொத்துக்களைக் கொள்ளையிடுதல் மேலும் கால்நடைகளைக் கொள்ளையிடுதல் என்று நம் பாரதத்தின் செழிப்பு மங்க ஆரம்பித்தது.

இவர்களிடமிருந்து நம் மக்களைக் காக்கவும், செல்வங்களை காப்பாற்றவும், ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொரு இடங்களில் மகாவீரர்கள் உருவாகினார்கள். அதில் ரானாவும் ஒருவர்.

பாரதத்தின் போர் முறை என்பது போர்க்களத்தில் மட்டுமே வீரத்தைக் காட்டுவார்கள். எதிரி நாட்டினரின் குடிமக்களை துன்புறுத்த மாட்டார்கள். தங்கள் பெருமையை நிலை நாட்ட கோவில், குளங்களை நிர்மானிப்பார்கள். அதேப் போல் அவர்களின் சமய வழிபாட்டுக்களைத் தடுக்கவும் மாட்டார்கள். வெகு சிலரே அதில் விதி விலக்கு.

இப்பேற்பட்டப் பண்புகளில் திளைத்தவர்களுக்கு அக்பர் மற்றும் அவர் படைகளின் போர் முறையும், அதன் பின்னான செயல்களும் பயத்தைத் தோற்றுவித்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.