(Reading time: 14 - 28 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

மான்சிங் போன்ற சிலர் பயத்தாலும் , அவர் அளிக்கும் சில செல்வங்களுக்காகவும்  அவரின் கீழ் இருக்கச் சம்மதித்து இருந்தனர். அதற்காக அவர்கள் கொடுத்த விலைகளில் முக்கியமானது தங்கள் சொந்த ராஜ்ஜிய மக்களை அடிமையாகியதும், தங்கள் வீட்டுப் பெண்களை திருமணம் செய்துக் கொடுத்து உறவுப் பாலங்களை ஏற்படுத்திக் கொண்டதும் ஆகும்,

திருமண உறவுகளை ஏற்படுத்திக் கொடுத்தப் பின் தான் அவர்களுக்கு உண்மைப் புரிந்தது. தங்கள் வீட்டுப் பெண்கள் அதற்குப் பிறகு தங்களுக்குச் சொந்தமில்லை என்பது. ஆனால் அவர்களால் அக்பரிடம் கேள்விகள் கேட்க இயலவில்லை.

மேலும் குடிமக்களின் மனதில் வெறுப்பு ஏற்பட்டு இருக்க, அது அங்கே அங்கே புரட்சியாக வெடித்துக் கொண்டு இருந்தது.

இதிலிருந்து மான்சிங் போன்றவர்கள் அக்பரை ஆதரிப்பதை நிறுத்த எண்ணினாலும், அவர்களின் உறவுகள் அவரிடம் இருக்கவே, வேறு வழி இல்லாது தொடர்ந்தனர்.

இந்த நேரத்தில் தான் அக்பர் ராணா மீதுப் போர் தொடுக்க தன் தளபதியை அனுப்பி இருக்க, அவரின் உதவிக்கு மான்சிங் செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் அப்துல் ரஹீம் சொற்படித் தான் போர் நடக்க வேண்டும் என்றும், மற்றவர்கள் அவர்களுக்குக் கீழ் தான் செயல்பட வேண்டும் என்ற உத்தரவும் அதில் இருந்தது.

இது மற்றவர்களைக் காட்டிலும் மான்சிங் மனத்தை மிகவும் பாதித்தது. இந்த நேரத்தில் தான் ராணி ஜோதாவிடமிருந்து வந்த பணியாளன், கிரண் தேவியைப் பற்றியும், அங்கே அவள் சந்தித்த இடர்பாடுகள் பற்றியும் எடுத்துக் கூறினார்.

அதைக் கேட்ட மான்சிங்கிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஜோதாவைப் போல் இவளும் நம் பெண்ணல்லவா என்ற எண்ணம் தோன்ற, இந்தப் போர் ஆரம்பிக்கும் முன்பே அவர் கலந்துக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் அவரால் எதுவும் செய்ய இயலவில்லை.

சொந்த சகோதரனை எதிர்த்துப் போரிட நேர்ந்தது அவரை வேதனைப் படுத்தியது. அதிலும் அக்பரின் படைகள் போரிட்ட முறையில் தங்கள் இனத்தைச் சேர்ந்த வீரர்களின் கொடூர மரணம் அவரை நிலைக் குலைய வைத்தது.

இதற்குள் ஜோதாவிடமிருந்து மேலும் ஒரு செய்தி வந்து இருந்தது. அது அக்பர் கிரண் தேவியைத் தேடிச் சென்று இருப்பதாகவும், அவள் அக்பரை ஏளனப் படுத்தியதும், அவரிடமிருந்து தப்பியதும் அவருக்கு மிகுந்தக் கோபத்தை ஏற்படுத்தி இருகிறது என்றும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.