(Reading time: 14 - 28 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

தெரியவில்லை.”

“வருந்தாதே மான்சிங். எல்லாம் வல்ல நம் பவானித் தாய் நம்மைக் காப்பாள்”

அப்போது அப்துல் இவர்கள் இருப்பிடம் நோக்கி வருவதைக் கண்டு கொண்ட மான்சிங் ,

“மகாராணா , தாங்கள் கவசங்களையும், வாளையும் என்னிடம் கொடுங்கள்” என்றார்.

அவரின் எண்ணம் புரிந்தவராக

“இல்லை மான்சிங். என்ன வந்தாலும் அது என்னைச் சேரட்டும்” என்றார்.

“வேண்டாம் சகோதரரே. இனி ஒரு ராணா எங்களுக்குக் கிடைப்பது அரிது. தாங்கள் மட்டுமே இந்த நாட்டைக் காப்பாற்ற இயலும். நம் தந்தையின் கனவான சித்தூர்க் கோட்டையைக் கைப்பற்ற உங்களால் மட்டுமே இயலும். எனவே தயை கூர்ந்து தங்கள் உடமைகளை என்னிடம் கொடுங்கள் “ என்றார்.

அதற்கு மேல் மறுக்க இயலாமல்,

“சகோதரனே, என் உடையில் நீ மாற முயல்கிறாய். ஆனால் எக்காரணம் கொண்டும் நம் எதிரிகளின் கையில் சிக்கி விடாதே. நீ ஒருபுறம் செல். நான் ஒருபுறம் செல்கிறேன் அந்த தளபதிக் குழம்பட்டும்” என்று கூற அவரிடம் சரி என்றார் மான்சிங்.

அதன் படி ராணாவின் உடையை தான் அணிந்துக் கொண்டு வேறுபுறம் சென்றார். அவர் செல்வதைப் பார்த்தப் பின்பே ராணாவும் மற்றொருப் புறம் சென்றார்.

ஆனால் சிறிது தொலைவுச் சென்று மீண்டும் போர்க்களம் நோக்கித் திரும்பி வந்தார் மான்சிங்.

அதற்குள் அங்கே அப்துல் எங்கே எனத் தேடிக் கொண்டிருக்க, மான்சிங் ராணா உடையில் வருவது அறியாமல் அவர் மேலே தன் குறுவாளை ஏற்றி இருந்தான்.

அப்துலைத் தொடர்ந்து வந்து இருந்த ப்ரித்வி, ராணாவின் வாளைப் பார்த்து விட்டு ரானவைத் தான் வீழ்த்தி விட்டான் என்று எண்ணிக் கொண்டான்.

அதற்கு மேல் ப்ரித்வியின் உக்கிரம் அதிகமாகி அப்துலை நேரடியாகத் தாக்கத் தொடங்கினான். முதலில் திகைத்தாலும் , விரைவில் சுதாரித்துக் கொண்ட அப்துல், ப்ரித்வியின் மீது உயிர்த் தாக்குதல் நடத்தினான்.

இருவரின் உக்கிரமான போரின் ஒரு கட்டத்தில், ப்ரித்வியின் வாளை தூக்கிச் சுழற்ற, நிராயுதப் பாணியாக நின்ற ப்ரித்வியின் மீது தன் வாளை பாய்ச்சினான் அப்துல். அடுத்த நொடி ப்ரித்வி தரையின் வீழ்ந்தான்.

இதற்குள் ராணாவின் படைகள் பெரும்பாலும் மடிந்தும், பின் வாங்கியும் சென்று இருக்க, தங்கள் படையிலும் எதிர்பார்த்ததை விட அதிகமான வீரர்கள் இழப்பு ஏற்பட்டு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.