அப்போது வெளியில் பலத்தப் புரவிகளின் சத்தம் கேட்க, திடுக்கிட்டு விழித்தனர். வெளியில் வந்துப் பார்த்தப் போது சுமார் இருநூறு பேர் கொண்ட படைகளோடு அக்பர் முன்னணியில் வந்துக் கொண்டிருந்தார்.
அதைக் கண்ட காவலன் அவசரமாகக் கொம்புகளை ஊத, வேகமாக வந்து கிரண் தேவியைச் சுற்றி அரண் அமைத்தனர் .
ஆனால் அக்பர் கண்ணசைவில் அவரின் படைகள் இவர்களைத் தாக்கத் தொடங்கினார்கள்.
கடுமையானப் போர் ஒரு புறம் நடைபெற, கிரண் தேவியை இழுத்து வர அக்பர் உத்தரவிட்டார்.
அவளோ அவளை நெருங்கியவர்களை விண்ணுலகத்திற்கு அனுப்பிக் கொண்டு இருந்தாள்.
சற்று நேரம் பொறுத்துப் பார்த்த அக்பர், தானே அவள் அருகில் சென்றார்.
“பெண்ணே, என்னப் பார்க்கிறாய்? உன்னை எப்படிக் கண்டறிந்தேன் என்றுதானே”
கிரண் தேவி பதில் சொல்லாமல் நின்றாள்.
“ஹ. ஹ. எல்லாம் உன்னிடமிருந்துக் கற்றுக் கொண்டது தான். எப்படி என்னை உளவுப் பார்க்க என் அரண்மனைக்குள் எப்படி நுழைந்தீர்களோ , அதே போல் இந்தக் கூட்டத்திலும் என் உளவாளி ஒருவன் உண்டு. அத்தோடு உன் சகோதரியான என் மனைவி , இப்போது எனக்கு விசுவாசமாக இல்லாமல், அவளின் நாட்டிற்கு உண்மையாக இருக்கப் போகிறாளாம். அதனால் அவள் உனக்கு எச்சரிக்கைச் செய்தி அனுப்பி இருக்கிறாள் போலே. ஆனால் அவளும் அறியாதது உண்டெனில் இந்த அக்பரின் கண்களுக்கு எல்லைக் கிடையாது என்பதே. அவள் அரண்மனையில் என்ன சொன்னாள் என்பதில் இருந்து, தற்போது உனக்கு செய்தி சொல்ல வந்த வீரர்களை சந்திக்கும் வரை எனக்கு தகவல் சொல்ல ஒற்றர்கள் உண்டு. ஆகையால் பெண்ணே, இனியும் நீ என்னிடமிருந்து தப்ப இயலாது. நீயாகச் சரணடைந்து விட்டால் உன் உயிராவது மிஞ்சும்” என,
“ஹ. அது என் உயிர் இருக்கும் வரை நடக்காது. “
“உன் உயிர் உனக்குச் சொந்தமானது இல்லை பெண்ணே. உன் அருமை மகாராஜாவும், ஆருயிர் காதலனும் போர்க் களத்தில் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்கள். அதனால் இந்த உதய்ப் பூர் ராஜ்ஜியம் எனக்குச் சொந்தம். இந்த ராஜ்யத்தில் இருக்கும் ஒவ்வொரு பொருளும், உயிரும் இனி என் அடிமை. “