(Reading time: 14 - 28 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

தெரிவித்து இருந்தாள். அதனால் கிரண் தேவியை அடிமைப்படுத்தி தன் அந்தபுரத்தில் சிறை வைப்பதில் தீவிரமாக இறங்கி இருக்கிறார். இந்த நிலைமையில் அவளைக் காப்பாற்றக் கூடியது ப்ரித்விராஜ் மற்றும் ராணா இருவர் மட்டுமே என்றும் கூறியிருந்தாள்.

இவை எல்லாம் அவர் மனதில் ஓட, மிகுந்தப் படை பலத்தை சமாளிக்க முடியாமல் ராணாவின் வீரர்கள் மடிந்துக் கொண்டிருந்தார்கள். அதை அடுத்து அவரின் தளபதிகள் அவரைத் தப்பித்துச் சென்று விடுமாறு கூறவே, அவர் போர்க் களத்தில் இருந்து பின் வாங்க ஆரம்பித்து இருந்தார்.

அப்போதும் இயன்ற வரை தன் வீரர்களை எதிரிகளிடமிருந்து காப்பாற்றியப் படியே தான் சென்றார்.

ப்ரித்விராஜ் அப்துல் ரஹீமைத் தடுத்துக் கொண்டிருக்க, மான்சிங் ராணாவின் பின்னால் சென்று இருந்தார்.

சற்றுத் தொலைவு சென்றப் பின் மான்சிங் தன் சகோதரனை

“ரானா மகராஜ் “  என்றழைக்க ராணா திரும்பினார்.

மான்சிங் முகம் கண்டு அவரைத் தற்போது எதிரியாகக் கருதுவதா, இல்லை சகோதரனாகக் கருதுவதா என்று சிந்தனை செய்தார்.

மான்சிங்கோ  அவரின் சிந்தனையைக் கண்டுக் கொள்ளாமல்,

“மகாராஜ், என்னை மன்னியுங்கள். அதிகாரப் போட்டியின் விளைவால் என் சொந்தச் சகோதரனையே எதிர்த்துப் போரிடும் அளவிற்குத் தரம் தாழ்ந்து விட்டேன்” என்றுக் கூறினார்.

அவரின் முகம் பார்த்த ராணா , மான்சிங் தன் உள்ளமுவந்து கேட்கும் மன்னிப்பு என்று உணர்ந்துக் கொண்டார்.

“நமக்குள் என்ன மன்னிப்பு மான் சிங். உன் உரிமையை நீ கேட்டதில் எந்தத் தவறுமில்லை. அது கிடைக்காத போது இடைவெளி விழுந்து விடுகிறது. அவ்வளவுதான் “

“என் ராஜிய உரிமைப் பற்றி மட்டும் பேசவில்லை மகாராணா. தாங்கள் எதிர்த்த மணஉறவுகளை நான் அலட்சியபடுத்தியதும் தவறு என்று உணர்ந்துக் கொண்டேன். அதன் விளைவு தான் இன்றைக்கு ஜோதா ராணி மாளிகைச் சிறையில் இருக்கிறாள். எல்லாம் கிடைக்கும். ஆனால் சுதந்திரம் கிடையாது. அவளின் இறை வழிபாட்டிற்காகக் கூட அந்த மாளிகை விட்டு வெளியே வர இயலாது. ஏன் இந்தப் போரில் எனக்கு ஏதேனும் ஆனால் கூட அவள் வர முடியாது. இப்படி ஒரு வாழ்க்கைக்கு அவளை தள்ளி விட்டு விட்டேனே என்று வேதனைப் படுகிறேன் மகாராணா. இதற்குப் பரிகாரம் என்ன என்றுத்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.