(Reading time: 14 - 28 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

“எவரின் உயிரையும் அவர் அனுமதி இல்லாமல் சொந்தம் கொண்டாட முடியாது அரசே. மேலும் என் உயிர் , உடல், பொருள், ஆவி அனைத்தும் எங்கள் மகாராஜ் ரானாவிற்கு மட்டுமே சொந்தம். ”

“ஹ. உன் பெரிய தந்தையே விண்ணுலகில் வீர முழக்கமிட்டுக் கொண்டு இருப்பார். அவருக்குச் சொந்தமான ராஜ்ஜியம் என் வசம் என்னும் போது, நீயும் என் வசமாகத் தான் இருக்க வேண்டும் பெண்ணே”

“நீங்கள் எண்ணுவது நடக்க வாய்ப்பே இல்லை அரசே.”

“அதையும் தான் பார்க்காலாம். இதோ உன்னை நான் வலுகாட்டயமாக இழுத்துக் கொண்டு போகிறேன். உன்னை யார் காப்பாற்றுகிறார்கள் என்றுப் பார்க்கலாம்” என்றுக் கூறி அவள் கையை இழுக்க முயற்சித்தார்.

ஆனால் பரிதாபம். அவரால் ஒரு நிலையில் நிற்க இயலவில்லை. ராணியை அசைக்கக் கூட இயலவில்லை. அத்தனை உறுதியாக நின்று இருந்தாள்.

இத்தனைச் சின்னப் பெண்ணுக்குள் இத்தனை வலிமையா என்று அதிசயித்தார்.

அக்பர் கிரண் தேவியை நெருங்க முயலும் நேரத்தில், கிரண் தேவியின் வீரர்கள் தங்களைச் சிறைப் பிடித்த அக்பர் வீரர்களோடு போரிட்டு கிரண் தேவி அருகே வந்து நின்றனர்.

கிரண் தேவி அக்பருக்குப் பதிலாக “நீ ஒரு ராணாவை அழித்தால், இந்த ராஜபுத்திர மண்ணில் வாழும் ஒவ்வொரு உயிரும் மகாரானாவாக உருவாகும். “ என்றுக் கூற , அக்பரின் முகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கோபம் ஏறியது.

அதைக் கண்ட , அவரின் வீரர்கள் அத்தனை ராஜபுத்திர வீரர்களையும் வெட்டி வீழ்த்த ஆரம்பித்தார்கள்.

தன் பொருட்டு மரணிக்கும் வீரர்களைக் கண்ட கிரண் தேவியின் நெஞ்சம் மிகுந்த வருத்தமடைந்தது.

சற்று நேரம் கண்கள் மூடி “தாயே, நான் என்ன செய்ய வேண்டும் என்றுத் தெரியவில்லையே. “ என்று வேண்டினாள். பின் தன்னை உணர்ந்துக் கொண்டவளாக, செயல்பட ஆரம்பித்தாள்.

ராணி கிரண் தேவி இந்தக் கோவிலுக்குள் அடைக்கலம் பெற்ற நாளில் இருந்து நாள் தவறாமல் அன்னம் படைக்கும் வேலையையும், அலங்காரங்களும் தன் கைப்பட செய்து மகிழ்ந்தாள். அத்தோடு கோவிலுக்கு வரும் பண்டிதர் மூலம், தன் நாட்டைக் காப்பாற்ற

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.