இருந்ததைக் கண்டான். மேலும் அநேகம் பேருக்கு வெட்டுக் காயங்களும் ஏற்பட்டு இருந்தன.
இதை எல்லாம் கவனித்துச் சரி செய்ய எண்ணித் திரும்பிய வேளையில், அவன் மார்பில் வேல் ஒன்றுப் பாய்ந்து இருந்தது. எதிர்பார்க்காத நேரத்தில் நடைபெற்ற இந்த தாக்குதலைச் செய்தது யார் என்று பார்க்க, ப்ரித்வி தான் தள்ளாடியபடி எழுந்து நின்று இருந்தான்.
ப்ரித்விராஜின் குறியானது மிகச் சரியாகப் பாய்ந்து இருக்க, அப்துலின் இதயம் தன் இயக்கத்தை நிறுத்தியது.
அதைப் பார்த்துக் கொண்டே இருவரும் கீழே விழுந்தனர். ப்ரித்வியின் இதயமோ தன் இதயம் கவர்ந்த ராணியின் பின்னே சென்று இருந்தது. தன் மனதிற்குள்
“தேவி, உனக்குக் கொடுத்த வாக்கின் படி என்னால் இயன்ற அளவு ராணாவைக் காப்பற்றி விட்டேன். ஆனால் என்னைக் காத்துக் கொள்ள இயலவில்லை. உன்னைக் கரம் பிடிக்கும் பாக்கியம் எனக்கு இந்தச் ஜென்மத்தில் இல்லை. இனி வரும் ஜென்மங்களிலாவது நான் உன்னோடு இணைய எந்தத் தடையும் இருக்காமல் இருக்க என் தாய் கரணி மாதா அருள் புரியவேண்டும். “ என்று மானசீகமாக நினைத்தான்.
மேலும் அவன் மனதில் “இறைவா, என் இந்த நிலையை தேவியிடத்தில் எடுத்துச் சொல்ல ஏதாவது வழி செய் “ என்று நினைத்தான். இறைவனின் அருள் அவனுக்குக் கிடைத்ததோ என்னும்படியாக , அவனின் ஆன்மா தன் இணையத் தேடிச் சென்றது.
அவளிடத்தில் எப்படிப் பேச என்று தவித்தப் போதுதான் ஜோதாவிடமிருந்து தகவல் சொல்ல வீரர்கள் காத்து இருந்தனர். தான் சொல்ல நினைத்ததை அவர்கள் மூலமாக சொன்னான் ப்ரித்வி.
ஜோதாவின் வீரர்கள் பேசுவதைக் குறிக்கிடாமல் கேட்டக் கிரண் தேவி, கண்களில் நீர் வழிய,
“அப்படி என்றால் என் நாயகன் என்னை விட்டுச் சென்று விட்டாரா?” என்றுக் கேட்டாள்.
ஆம் என்றுப் பதில் கூற இயலாமல் அவர்கள் தலை குனிந்தனர். அதற்கு மேல் தாளாத கிரண் தேவி கோவிலுக்குள் சென்றாள்.
“தாயே. என்னை ஏன் இப்படி நிர்கதியாககினாய்? என் மனதறிந்து நான் எந்தப் பிழையும் செய்யவில்லையே? எனக்கு ஏன் இந்தத் தண்டனை? உன்னையே நம்பி இருந்த எங்களை கை விட்டு விட்டாயே. இது நியாயமா?” என்றுக் கண்ணீர் வழிய நியாயம் கேட்டுக் கொண்டு இருந்தாள்.