(Reading time: 14 - 28 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

ஹோமம் வளர்க்கச் சொன்னாள் கிரண் தேவி.

அந்த ஹோமத்தினுள் இன்றைய பூஜை முடித்ததற்கான அடையாளமாக இன்னும் ஹோமத்தினுள் தீக்கங்குகள் எரிந்துக் கொண்டிருந்தன.

மெல்ல அதை நோக்கி அடியெடுத்துச் சென்று இருந்த கிரண் தேவி,

“பேரரசே, இந்த ஜென்மத்தில் என் மனகவர்ந்த நாயகனோடு சேர்ந்து வாழ வாய்ப்பு இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் இனி வரும் ஜென்மங்களில் நிச்சயம் அவரோடு சேர்வேன். அத்தோடு இந்தத் தலைமுறையில் ஏற்பட்ட தீயினுள் தங்களை மாய்த்துக் கொள்ளும் ராஜபுத்திரப் பெண்களின் சடங்குகள் இன்றைக்கு என்னோடு முடியட்டும். இனி ஒருவர் அதைச் செய்யும் அவசியம் நேராது நான் காப்பேன். அது இந்தக் கரணி மாதாவின் மேல் ஆணை. அக்பரே, உங்களைப் போன்ற பெண்களை போகப் பொருளாக என்னும் ஆண்களை அழிக்காமல் விட மாட்டேன். என் மக்களை , குறிப்பாகப் பெண்களை அபகரிக்க நினைக்கும் ஆண்களிடமிருந்துக் காப்பாற்ற ஏதோ ஒரு ரூபத்தில் என்னுள் எரியும் இந்த நெருப்பானது அவர்களை எரித்து சாம்பலாக்கும். இதுவும் அந்தத் தாயின் மீது சத்தியம். நான் மூட்டிக் கொள்ளும் இந்தத் தீ , ராணாவின் நெஞ்சில் நெருப்பாக எரிந்து , வெகு விரைவில் அக்பரை இங்கிருந்து விரட்டி விடுவார். உலகமெங்கும் போற்றும் உத்தம வீரராக ராணா பிரதாப் சிங் வலம் வருவார். என்றவள் மூன்று முறை அந்த ஹோமக் குண்டத்தை வலம் வந்து அந்த யாகத் தீயினுள் இறங்கினாள்.

இறங்கியவள் தன்னைச் சுற்றி அந்த நெருப்பை படர விட, மற்றவர்கள் சுதாரிக்கும் முன் , கிரண் தேவி இறங்கி விட்டாள். அதைப் பார்த்து அப்படியே திகைத்து நின்று விட்டார்கள்.

ராஜபுத்திரப் பெண்கள் தீக்குளிப்பது எல்லாம் பார்த்தவர் தான் அக்பர். ஆனால் இதுவரைக் கேள்விபடாத ஒன்று என்னவென்றால், திருமணம் முடித்தவர்களுக்கே மட்டுமே இந்தச் சடங்குகள் நடந்துக் கொண்டிருந்தன.

கணவருக்காக மட்டுமே இதுவரை நடந்த இந்தச் சம்பவம், தான் கொண்ட காதலுக்காகவும் நடத்தப் படும் என்று அறிந்துக் கொண்ட அக்பர் மனம் கலங்கியவாறு வெளியே சென்றார்

தொடரும்!

Episode # 45

Episode # 47

Go to Kaanaai kanne story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.