(Reading time: 13 - 25 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

தொடர்கதை - காணாய் கண்ணே - 45 - தேவி

காரானாவின் உத்தரவுபடி கிரண் தேவி பிகானர் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தாள். அவள் மனம் முழுதும் ஏனோ சொல்லத் தெரியாத உணர்வுகளால் நிரம்பி கிடந்தது.

சென்ற முறை ராணா மற்றும் இளவசரனோடு பயணம் செய்த இடங்கள் வழியாகவேத் திரும்பிச் சென்றுக் கொண்டு இருந்தார்கள் கிரண் தேவியும் அவளுடைய பாதுகாப்பு வீரர்களும். கிரண் தேவி புரவியில் செல்லவே விரும்புவாள். ராணாவின் சொல்லிற்காக வெகு அரிதான சமயங்களில் பல்லாக்கில் பயணம் செய்வாள். இந்த முறை ராணாவின் கட்டளையாக இருக்கவே, அதற்குப் பணிந்து பல்லாக்கில் சென்றுக் கொண்டிருந்தார்கள். இதனால் சற்றுத் தாமதமாகியது.

பிகானர் ராஜ்யத்திற்குச் செல்லும் முன்  கரணி மாதா கோவில் வரவே, வீரர்களை அங்கே இளைப்பாறச் செய்து விட்டு, அருகில் குடில் அமைக்கச் சொன்னாள்.

அப்போதே சந்திரன் எழுந்திருக்கவே, இத்தோடு இன்றையப் பயணம் முடித்துக் கொள்ளலாம் என்று எண்ணி வீரர்களுக்கு உத்தரவிட்டாள்.

ராணா ஆரண்ய மலைப் பகுதியில் இருந்து சமதளத்திற்குச் செல்லும்போதே, வீரர்கள் மூலம் பிகானர் மற்றும் பக்கத்து சிற்றர்சர்களிடமிருந்து வீரர்களை ஹடில்கடி நோக்கி வரச் சொல்லியிருந்தார்.

இதை ரானாவைச் சந்திக்கும் போதே கண்டு கொண்டிருந்த கிரண் தேவி, அன்று இரவு அங்கே தங்கியிருக்கும் போது, வீரர்கள் அணிவகுத்துச் செல்வதைக் கண்டாள். ஒரு பக்கம் நம் வீரர்களை எண்ணிப் பெருமையாகவும், மற்றொரு பக்கம் போரினால் விளையும் நாசங்களையும் எண்ணி மனதில் வேதனைக் கொண்டாள்.

இளவரசன் நினைவாகவே இருந்தவளுக்கு, அக்பர் அவளைச் சிறையெடுத்த நிகழ்வு அவ்வப்போது மனதில் வந்து சென்றது. அத்தோடு அவள் அக்பரை வீழ்த்திய போது அவரின் கண்களில் தோன்றிய அந்தக் கனல் அவளுக்குச் சற்று அச்சம் ஏற்படுத்தியது உண்மை.

ஆனால் தற்போது அக்பர் போர் ஏற்பாடுகளில் இருப்பதால் தன்னைப் பற்றிச் சிந்திக்க மாட்டார் என்று எண்ணிக் கொண்டாள்.

அன்றைய இரவு உறக்கமும் , விழிப்புமாகக் கழித்தவளுக்கு, பொழுது புலர்ந்ததும் உற்சாகமாக இருந்தது.

அருகில் இருந்த ஓடையில் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு, தன் பணிப்பெண்களை அழைத்துக் கொண்டு கரணி மாதா கோவிலுக்குக் கிளம்பினாள்.

ஓடையில் அருகில் காட்டுச் செடிகளில் மலர்கள் பூத்து இருக்க, அதைப் பறித்து

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.