(Reading time: 13 - 25 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

அவர் வாளை நீட்டிய இடங்களில் எல்லாம் மூன்று மூன்று பேராகத் தான் மடிந்தனர்.

ப்ரித்வியோ ராணாவின் கீழ் உபதளபதியாகச் செயல்பட்டான். அவரின் புரவியைச் சுற்றியே ப்ரித்வி யானையின் மேல் அமர்ந்து போர் புரிந்தான்.

யானையின் துதிக்கையில் மரப்பிடி அமைத்த வாளைக் கொடுத்து இருக்க, யானை சுழற்றியதைப் பார்த்து முகலாய வீரர்கள் வியந்து போய் நின்றனர். அவர்களால் எதிர்த்துப் போரிடவே முடியவில்லை. முழுக்கத் தற்காப்புப் போர் மட்டுமே புரிந்துக் கொண்டனர்.

நேரமாக நேரமாகப் போரின் உக்கிரம் கூடிய நிலையில் , இரு பக்கமும் வீரர்களின் இழப்புகள் அதிகமாக இருந்தன. ராணாவின் தம்பி மான்சிங் ரானவையே சுற்றி வளைத்துக் கொண்டு இருந்தார்.

ராணா தற்காப்புப் போர் மட்டுமே நடத்திக் கொண்டு இருந்தார். அதைக் கண்டு மான்சிங்கிற்கு சற்று குற்ற உணர்ச்சி வந்தது.

மாலை சூரியன் மறைவதற்கான நேரம் நெருங்க நெருங்க, அப்துல் ரஹீம் தன் படைகளை முழு வேகத்தோடு தாக்க ஆரம்பித்ததில், ராணாவின் வீரர்கள் மிக அதிகமான சேதத்திற்கு ஆளாகினர். யானைகளும் , புரவிகளும் அங்கே அங்கே மாண்டு இருந்ததைப் பார்க்கையில் சிறு குன்று போல் இருந்தது.

இறந்த யானை, புரவி மற்றும் வீரர்களைத் தாண்டி தாக்குவது இருதரப்பினருக்கும் கடினமாக இருந்தது.

ஒரு கட்டத்தில் சேத்தக்கின் வயிற்றிக் மிகப் பெரிய ஈட்டி ஒன்றுத் தாக்கி இருக்க, அது நிலை தடுமாறிக் கீழே விழ ஆரம்பித்தது.

இதைக் கவனித்த ப்ரித்விராஜ், மகாரானாவோடு பேசினான்.

“மகாராஜ், தாங்கள் சேத்தக் அழைத்துக் கொண்டு இங்கிருந்துத் தப்பி விடுங்கள்” என,

“ஒருநாளும் நடக்காது. என் உயிர் பிரிந்தாலும் சரி, இங்கிருந்து நான் பின் வாங்க மாட்டேன்”

“இல்லை மகாராஜ். தாங்கள் இருந்தால் இதே போல் இன்னும் நூறு யுத்தம் நடத்த முடியும். வீரர்களை உருவாக்கவும் முடியும். ஆனால் தங்களை இழந்தால் மீண்டும் ஒரு ராணாவை எங்களால் உருவாக்க முடியாது. தயைக் கூர்ந்து தப்பி விடுங்கள் “ என்றுக் கேட்க, அதற்கும் மறுத்தார்.

ப்ரித்விராஜ் மட்டுமில்லாமல், மேலும் சில உப தளபதிகளும் எடுத்துச் சொல்ல, ஏன் கெஞ்ச, வேறு வழியில்லாமல் அந்த இடத்தை விட்டுக் கிளம்ப ஒத்துக் கொண்டார்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.