(Reading time: 13 - 25 minutes)
Kaanaai kanne
Kaanaai kanne

“போரின் நிகழ்வுகளைக் கூறுங்கள்” என்றுக் கூற, வீரர்கள் நேரில் பார்த்துச் சொல்வது போல் கூற ஆரம்பித்தனர்.

கிரண் தேவிக் கிளம்பிச் சென்றவுடன், ரானாவும், ப்ரித்வியுமாக போர்ப் பயிற்சி அளித்து அண்டை நாடுகளில் தங்க வைக்கப் பட்டு இருந்த வீரர்களை வரவழைத்தனர்.

அவர்கள் வந்து சேரும் வரை இங்குள்ள வீரர்களுக்கு மேலும் சில உக்கிரமான பயிற்சிகள் கொடுக்கப்பட்டன.

மேலும் படை நடத்துவதற்குத் தேவையான இயந்திரங்கள், ஆயுதங்கள் எல்லாம் தயார் செய்து வைத்தனர். இதற்கு எல்லாம் பத்து நாட்கள் வரைத் தேவைபட, இவர்கள் உதய்பூர் வழியாக பதேபூர் செல்ல முன்னேறினர்.

இவர்கள் இரண்டு நாட்கள் முன்னேறிச் சென்று இருக்கையில், அக்பரின் படைகள் அவரின் தளபதி தலைமையில் வந்து சேர்ந்தது.

ராணா தலைமையில் நாற்பாதாயிரம் வீரர்கள் சென்று இருக்க, அக்பரின் தளபதி அப்துல் ரஹீம் தலைமையில் எண்பதாயிரம் வீரர்கள் உதய்பூரின் வடக்குப் பக்கத்தில் அணிவகுத்து வந்தனர்.

அத்தோடு ஜோதாவின் தந்தையான மான்சிங்  தலைமையில் முப்பதாயிரம் வீரர்கள் உதய்பூரின் மேற்கு புறத்தில் அணிவகுத்து இருந்தனர்.

அப்துல் ரஹீமின் படைகளை ஓரளவு எதிர்பார்த்து இருந்த ரானாவும், ப்ரித்வியும் , மேற்குப் புறப் படைகளை எதிர்ப்பார்க்கவில்லை.

என்றாலும் சோர்ந்துப் போகாமால் வீரர்களுக்கு உற்சாகக் குரல் கொடுத்த வண்ணம் போர் முழக்கம் செய்தார் ராணா. வீரர்களும் உக்கிரத்தோடுப் போரைத் தொடங்கினார்கள்.

போர் நெடு நேரம் தொடர்ந்தது. புரவிகளும், யானைகளும் போரில் அளக்கறியச் செயல்களைச் செய்தது.

ஆம் . ஒவ்வொரு புரவி வீரனும், யானை வீரனும் குறைந்தப் பட்சம் பத்துப் பேரையாவதுத் தாக்கினார்கள். தன் மேல் அமர்ந்து வீரனின் சொல்லுக்கு அல்ல, எண்ணத்திற்கு கூட பணிவது போல் , வீரன் கண்கள் செல்லும் திக்கு எல்லாம் புரவிகளும், யானைகளும் சீறிப் பாய்ந்து சென்றன.

ராணாவின் உற்ற நண்பனான சேத்தக் தன் முன்னங்கால்களைத் தூக்கி சீறி பாய்ந்தோடியது. அதன் மேல் அமர்ந்து இருந்த ராணாவோ இரு கைகளிலும் மிகப்பெரிய வாளைச் சுழற்றியபடி சென்றுக் கொண்டிருந்தார்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.