மாலையாகத் தொடுத்தாள்.
அந்த மாலையை எடுத்துக் கொண்டு கோவிலுக்குச் செல்ல, இவள் கண்கள் அந்த துர்கா தேவியையேக் கண்டது. தன் கரத்தில் உள்ள மாலையை தேவிக்குச் சாற்றியவள், அவள் பாதங்களில் அமர்ந்து கொண்டாள்.
அவள் மனம் முழுதும்
“தாயே துர்கா தேவி, ராணா மேற்கொள்ளும் இந்தப் போர் முழு வெற்றி பெற அருள் புரித் தாயே. இந்தப் போர் நம் பாரத நாட்டின் பண்பாடும், தர்மமும் காப்பாற்ற நடைபெறும் போர். இதன் வெற்றி மன்னர் ரானாவிற்கு மட்டும் கிடைக்கும் வெற்றி அல்ல. ராஜபுத்திரர்களுக்குக் கிடைக்கும் வெற்றி. அத்தோடு என் மனதிற்கு பிரியமான , உன் மைந்தன் பிகானர் இளவரசருக்கும் இந்தப் போரின் மூலம் பேரும் , புகழும் கிடைக்க அருள் செய் தாயே” என்று வணங்கினாள்.
கரணி மாதாவின் முகமோ பேர், புகழ் கேட்கிறாயே வேறு தேவை இல்லையா என்ற பாவனையோடு அமைதியாக இருந்தாள்.
சற்று நேரம் கழித்து கோவிலை விட்டு வெளியே வர, வீரன் ஒருவன் நின்று இருந்தான்.
“ராணி, ஒரு வருத்தமான செய்தி” என்றான்.
“என்ன?”
“பிகானர் செல்லும் பாதையை அக்பர் படைகள் சுற்றி வளைத்து விட்டதாக செய்திகள் வந்து இருக்கின்றன ராணி”
“ஒஹ். தற்போது நம் பயணம் தொடங்குவது?’ என்று கிரண் தேவி கேள்வியாக முடிக்க,
“ஆபத்தானது ராணி. நாம் இங்கிருப்பது எதிரிகளுக்குத் தெரிய வாய்ப்பில்லை. உதய்பூரில் இல்லாவிட்டால் பிகானரில் தான் இருப்போம் என்று யூகித்து இருப்பார்கள். “
“அவர்களுக்கும் பயணக் கால அவகாசம் தெரிந்து இருக்கும் அல்லவா? நாம் இரு இடங்களிலும் இல்லை என்று அறியும் போது வழியில் தேடுவதற்கான வாய்ப்புகள் உண்டல்லவா?”
“உண்மைதான் ராணி. என்றாலும் இந்தக் கரணி மாதா கோவில் அருகில் இருக்கும் காடுகள் சற்று அடர்த்தியானவை. பெரும் படைகளைத் தேடுபவர்கள் வேண்டும் என்றால் காட்டின் உள்ளேச் சென்றுத் தேடலாம். நாம் சிறு பிரிவு தானே. மேலும் பெண்களோடு காட்டில் தங்க வாய்ப்புகள் குறைவு என்று ஊகிப்பார்கள்தானே”
“அதுவும் உண்மைதான் வீரரே. எனில் நம் குடிலை சற்றுப் பலமாக உருவாக்குங்கள். விலங்குகள் நடமாட்டம் திசை திருப்பவும் ஏற்பாடு செய்யுங்கள். “ என்று உத்தரவிட்டவள்