(Reading time: 14 - 27 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

சொன்னார்கள்.”

“என்னது?”

“நாம் அவர்கள் சொன்ன இடத்திற்கு வந்து விட்டோம். அதாவது உங்களை கடத்தி வந்து விட்டேன்” என்றபடி ஜீப்பை  நிறுத்தியவன் கீழே இறங்கினான்.

என்ன ஒரு தைரியம்? என்னை என்னவென்று நினைத்தாய்… என்று நினைத்தபடி அதிரதனும் ஒரு துள்ளலுடன் ஜீப்பை விட்டு இறங்கினான்.

அவனுடைய முதுகில் ஏதோ ஒன்று கடித்தது போல இருந்தது. ஓ இந்த பூச்சி தொல்லை வேறு!. முதுகை தட்டிவிட்டபடி அவனை நோக்கி  வேகமாக நடந்தான்.

“இருங்க நானும் வர்றேன்” என்றபடிய அதிதியும் ஓடி வந்தாள்.

எதிரில் நின்ற அந்த போலி ஆசாமியிடம்,

“ஏய் யார் நீ? நாங்கள் யார் என்று தெரியுமா? கடத்தி வந்து விட்டேன் என்று சர்வசாதாரணமாக சொல்கிறாய்?” என்று கத்தினான்.

“அதானே…  இந்த கருவியிலிருக்கும் பட்டனை அமுக்கினால் எங்களை தேடிக் கொண்டு ஆட்கள் வந்து விடுவார்கள் தெரியுமா? நீ குளோஸ்டா” என்றாள்.

‘அடிப்பாவி! அதை ஏன் சொன்னாய்? ரகசியமாக கையாள வேண்டிய விசயம் அல்லவா?’ அதிரதன் கவலையானான்.

“அப்படியா… இனி அது என்னிடம்தான் இருக்க வேண்டும்?” என்று அவர்களின் பின்னிருந்து ஒரு குரல் கேட்டது. யார்டா அது? என்று திரும்பி பார்ப்பதற்குள்… அதிதியின் கையிலிருந்த அந்த ஜிபிஎஸ் கருவி பறிமுதல் செய்யப்பட்டது.

அவர்களுக்கு பின்னால் ஒரு புதியவன் நின்றிருந்தான்! இன்னும் சிலர் சுற்றி வர ஆரம்பித்தனர்.

என்ன நடக்கிறது? பெரிய நெட்வொர்க் போலிருக்கே? அதிரதனுக்கு விரைவாக செயல்பட வேண்டும் என்று தோன்றியது. அவனுக்கு வர்மக்கலை தெரியும். அவர்களின் நரம்பை சுண்டியிழுத்து சாய்க்கத் தயாரானான். ஆனால்…

வாட் ஹாப்பெண்ட்? அவனால் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை… கால்கள் ஸ்திரமில்லாமல் போயின… தடுமாறி தரையி;ல் விழுந்தான். கைகளை தரையில் ஊன்றவும் உடல் ஒத்துழைக்கவில்லை. உடல் முழுவதும் மரத்து போனதுபோல ஆயிற்று

ஓ அந்த பூச்சிக்கடி… அது பூச்சியா இல்லை நரம்பு மண்டலத்தை பாதிக்கும் விசத்தை சுமந்து வந்த ஊதூசியா? ஊதூசி என்பது காட்டுவாசிகளுக்கு பழக்கமான விசயம் ஆயிற்றே… இங்கே அப்படிபட்டவர்கள் யாரும் இருக்கிறார்களா… ?அவன் யோசிக்கும்போதே அதிதியும் மயங்கி

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.