(Reading time: 14 - 27 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

இறந்தாலாவது போக வேண்டும். கண்களை இறுக்க மூடிக் கொண்டு தரையில் அவனுடைய தலையை மோத முயற்சித்தான். அதுவும் முடியவில்லை!

அவர்கள் வெடிச்சிரிப்பு சிரித்துக் கொண்டு அடியெடுத்து நடப்பது புரிந்தது. இதயத்தை வாள் கொண்டு அறுக்கப் போகும் அந்த காட்சியை காணும் சக்தியில்லாமல் அதிரதன் தளர்ந்தான்.

அதிதி… உன்னுடன் வாழத்தானே ஆசைப்பட்டேன்.. அதற்காகத்தானே அவ்வளவு முயற்சித்தேன்…  உன்னை ஓய வைத்திருந்த அவமானக் குழியில் இருந்து உன்னை காத்திடுவேன் என்று நீயும் என்மீது நம்பிக்கை வைத்திருந்தாய்…  நான் உன்னை காக்கவில்லை… உன் அம்மாவின் மீதிருந்த பழியையும் துடைக்கவில்லை!  எந்த நியாயமும் செய்யாமல் இப்படி பாதியிலேயே உன்னை கைவிட்டு விட்டேனே! அவன் உள்ளுக்குள் கதற ஆரம்பித்தான்.

“ரைட்…  டேய் வேலு… நான் சொன்னபடி அவள் அருகில் படுத்து போஸ் கொடு. அவள் முகத்தை அந்த பக்கம் திருப்பி விடு. அவள் மயங்கி இருப்பது தெரியக் கூடாது.  நான் போட்டோ எடுக்க ஆரம்பிக்கிறேன். “ அந்த குரல் அவனுக்குள் குமட்டலை ஏற்படுத்தியது.

அதிதியை வேலு நெருங்குவது தெரிந்தது. அவ்வளவுதானா… இந்த உலகமே அழியப் போகிறதா…? அவனுள் வெறுமை படர ஆரம்பித்தது. அவனுடைய விடியப் போகும் ‘நாளை’ இப்போதே இருள் சூழ தெரிந்தது.

அமைதியாக ஆரம்பித்த நொடிகள்…அதிதிக்கான ஆபத்தை  நோக்கி பயணிக்க ஆரம்பித்த வேளையில்,

“ஐயோ” என்ற அலறல் கேட்டது. அந்த வேலு அதிதியிடமிருந்து மின்னல் விரைவில் தூக்கி எறியப்பட்டான். தொலைவில் இருந்த மரத்தியோல் அவன் மோதி மயக்கமாகி விழுந்தான்.

“டேய் என்னடா ஆச்சு?” என்று கனகு வேலுவை நோக்கி பதட்டத்துடன் ஓடினான். அதற்குள் மருதுவும் தாக்கப்பட்டான். அவன் வைத்திருந்த காமிரா தரையில் அடித்து உடைக்கப் பட்டது.

அங்கு என்ன நடக்கிறது என்பதை அதிரதனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் கண்ணுக்கு எதுவும் தெரியவில்லை. மெல்லிய ஒளி மட்டுமே பரவியிருந்த அந்த நேரத்தில் அவனால் யாரையும் அடையாளம் காண முடியவில்லை.

“மருது.. வேலு செத்துட்டாண்டா.” கனகுவின் அலறல் கேட்டது. அதற்குள் மருதுவும் வானத்தை நோக்கி முழு வீச்சுடன் தூக்கி எறியப்பட்டான். கண நேரத்தில் திரும்பி வந்த அவனும் தரையில் தலை மோத ரத்தம் சிதற்றி இறந்து போனான்.

என்ன நடக்கிறது என்று புரியாமல் பயத்தில் அங்கிருந்து ஓட ஆரம்பித்த கனகுவை தரையில் வைத்து அழுத்துவது தெரிந்தது. யாரோ காலால் மிதிப்பதுபோன்ற பாவனை கனகுவிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.