ஆமாம்..... விஸ்வா சின்ன வயசுல பாத்தாது இப்ப எவளோ பெரிய பையனா வளந்துட ஆளே அடையாளம் தெரியாத மாரி என ரதி எக்ஸ்சைட்மெண்ட் உடன் சொல்ல உங்கனால என்ன கண்டு பிடிக்க முடியல ஆனா பாத்திங்கலா நான் உங்கள கண்டு பிடிச்சுட்டேன் என அவன் சிரித்து கொண்டே சொல்ல ம்..... இன்னும் சின்ன வயசுல இருந்த குறும்பு தனம் போல உனக்கு.... சரி அது இருக்கட்டும் ஏன் திடீர்னு எதும் சொல்லாம கொல்லாம வீட்ட காலி பண்ணிட்டு போய்டீங்க அத கேட்டதும் எனக்கு ஒரே ஷாக் உங்கள அப்பறம் காண்டக்ட் பன்லாம்னு பாத்தா கூட முடியல என ரதி கேட்க அதுவா ஆண்ட்டி அப்பாவ சடனா ட்ரான்ஸ்பர் பண்ணிட்டாங்க பேங்க் மானேஜர் ஆச்செ எப்ப மாறுவோம்னு சொல்ல முடியாது அதான் என விஸ்வா சொல்ல ஓ ஐ சி அதுக்குன்னு உங்க அம்மா என் கிட்ட சொல்லாம கொல்லாம இப்படியா போறது வெரி பேட் என ரதி சொல்லி கொண்டு இருக்கும் மோது ஏ விஷ்வா.... இந்தா உன்னோட நியூ ஸ்மார்ட் வாட்ச் இத மறந்துட்ட போற வாங்குற புதுசுல கட்ர தோட சரி அப்பறம் எல்லாத்தையும் மறந்து வெச்சிட்டு அம்மா இத எடுத்து வைக்கலயா அத எடுத்து வைகலயான்னு போன்ல திட்ட வேண்டியது ஆள் வளந்த அளவுக்கு அறிவு வளரள என அவன் தலையை தட்டினாள் மாலதி.
அம்மா....அம்மா சாரி சாரி அதுக்கு தான் நீ இருக்குல நான் என்ன மறந்தாலும் எடுத்துட்டு வந்து தருறதுக்கு மை ஸ்வீட் மாம் என அவள் கன்னத்தில் முத்தமிட்டு ம்.... அப்பறம் அம்மா இங்க பாரு யாருன்னு ரதி ஆண்ட்டி நம்ம பக்கத்து வீட்ல இருந்தாங்களே நியாபகம் இருக்கா என இவர்கள் செயலை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த ரதியை கை காட்டினான் விஷ்வா .
ஆன்...மாலதி என ரதி கூப்பிட அவளை முறைத்து விட்டு கண்டு கொள்ளாமல் கிளம்பினாள் மாலதி ஏ... மாலதி மாலதி என்ன எதுவும் பேசாம போற என்னாச்சு மாலதி என ரதி கூப்பிட கூப்பிட அவளை கண்டு கொள்ளாமல் நடந்து சென்றால் மாலதி அதே நேரத்தில் பார்ரின் கிளின்ட்ஸ் வருவதை கண்ட ரதி மாலதி யிடம் பிறகு பேசி கொள்ளலாம் என முடிவெடுத்தால் ஹலோ மேடம் வி ஆர் கிலாட் டு மீட் யூ என பாரின் கிளின்ட்ஸ் சொல்ல வெல்கம் மிஸ்டர் பால் இட்ஸ் மை ப்ளசர் என கையில் இருந்த பிளவர் பொக்கேவை கொடுத்து வரவேற்றாள் ரதி.
மன்வீர் வீட்டில்....
மன்வீர் வேத போய் நாம பாக்கலாமா அவன் நம்ம மேல கோவமா இருந்தாலும் பரவால அவனுக்கு போய் நம்ம என்ன நடந்துச்சு தேவேஸ்வர் ஆள வெச்சி பாம் செட் பண்ணி அவனோட அப்பாவ கொன்னாகங்குற விஷயத்த சொல்லி புரிய வைக்கலாம் என கவின் சொல்லி கொண்டிருக்க டிங் டிங் டிங்... என காலிங் பெல் அடித்தது யாரென கதவை திறந்து