வச்சிக்கோங்க," என்று பேசிவிட்டு சென்றார்.
"என்ன அத்தை, அவ எல்லாம் டாக்டர் சொன்னது போல தானே சாப்பிட்றா? அப்புறம் ஏன் இப்படி ஆச்சு?" என்று கார்த்திக் கவலையோடு கேட்க,
"தெரியலயே கார்த்தி, டாக்டர் சொன்னது போலத்தான் கவனமா கொடுத்தேன். அப்புறமும் ஏன் பிரஷர் குறையலன்னு தெரியலையே?" என்று அவரும் அதே கேள்வியை கேட்டார்.
அடுத்து அனைவரும் நித்யாவை சென்று பார்த்தனர். 5 மாதம் தான் ஆகிறது, ஆனால் இரத்த அழுத்தத்தால் முகம், கை, காலெல்லாம் ஊதி போனது போல் இருந்தது. அவளை அச்சுறுத்துவது போல் எதுவும் பேசக்கூடாது என்பதால்,
"நித்தி பிரஷர் தான் கொஞ்சம் அதிகமாக இருக்காம், இரண்டு நாள் ஹாஸ்பிட்டலில் இருந்தா எல்லாம் சரியாகிடும்," என்று கார்த்திக் அவளை தேற்றினான்.
மறுநாள் கார்த்திக்கை மருத்துவர் பார்க்க வேண்டுமென்று அழைத்தார். அவன் என்னவோ ஏதோவென்று படபடப்போடு சென்று பார்க்க,
"மிஸ்டர் கார்த்திக், உங்க மனைவிக்கு இன்னுமே இரத்த அழுத்தம் குறையவேயில்லை. அதுக்கேத்த மருந்து மாத்திரை தான் கொடுக்கிறோம், உப்பு, எண்ணெய் சேர்க்காத சாப்பாடு தான் கொடுக்கிறாங்க, ஆனாலும் அவங்களுக்கு இரத்த அழுத்தம் குறையவேயில்லை." என்று மருத்துவர் கூறினார்.
"எதனால டாக்டர் அப்படி, ஏன் அவளுக்கு பிளட் பிரஷர் குறையல?" என்று அவன் பதட்டத்தோடு கேட்க,
"மனசுல ஸ்ட்ரெஸ் இல்ல பயம் இருந்தா கூட ப்ளட் பிரஷர் அதிகமாகும், இந்த நேரத்தில் பிரசவத்தை நினைச்சு சில பேர் பயப்படுவாங்க தான், அதுக்கு பயப்படவே தேவையில்லைன்னு அவங்களுக்கு எடுத்து சொல்லிட்டு தான் இருக்கோம், ஆனா அவங்க அதுக்காக பயப்பட்றது போல தெரியல, வேற எதுக்கோ பயப்பட்றாங்க போல, அவங்க கூட பேசி பயத்தை தெளிய வைங்க, நான் முன்ன சொன்னது தான், இந்த நேரத்தில் ப்ளட் பிரஷர் இருந்தா அது அம்மா, குழந்தை ரெண்டுப்பேருக்குமே நல்லதில்லை. புரிஞ்சுக்கோங்க," என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
மருத்துவர் சொன்னதையே மனதில் ஓட்டிப் பார்த்தப்படி கார்த்திக் நித்யாவை பார்க்க வந்தான். வஞ்சி அவளுக்கு பழச்சாறு தயார் செய்ய, "அத்தை அதை என்கிட்ட கொடுங்க, நான் நித்திக்கு தரேன், நீங்க வீட்டுக்கு போயிட்டு அவளுக்கு மதிய சாப்பாடு எடுத்துட்டு வாங்க, நான் அதுவரை அவக்கூட இருக்கேன்." என்று சொல்ல,
அவர்களுக்கு தனிமை கொடுக்கும் எண்ணத்தில், "சரி கார்த்திக் பார்த்துக்க, நான் போயிட்டு