(Reading time: 11 - 22 minutes)
Verena nee iruppin.. Verethum vendame
Verena nee iruppin.. Verethum vendame

வந்துட்றேன்." என்று சொல்லிவிட்டு வஞ்சி கிளம்பியதும், அவளை அமர வைத்து அவளிடம் பழச்சாறு அடங்கிய டம்ளரை கொடுக்கவும், அவளும் அதை வாங்கி பருகினாள். பின் அவள் படுத்திருந்த கட்டிலில் அவள் அருகிலேயே அமர்ந்தவன், அவளின் கைகளை எடுத்து தன் கைகளில் வைத்துக் கொண்டு,

"நித்திம்மா நான் ஒன்னு கேட்பேன், எதையும் மறைக்காம பதில் சொல்லணும், உனக்குள்ள என்ன பிரச்சனை ஓடுது, உன்னோட மனசுல அப்படி என்ன பயம்? எதுவா இருந்தாலும் வெளியே சொல்லணும்னு சொல்லியிருக்கேன் இல்ல, இப்படி நீ மனசுக்குள்ளேயே மறைச்சு வச்சு ஏன் கஷ்டப்பட்ற, அதனால இப்போ ப்ளட் பிரஷர் குறையவே மாட்டேங்குதுன்னு டாக்டர் சொல்றாங்க, உன்னோட பிரச்சனை எதுவா இருந்தாலும் மாமாக்கிட்ட சொல்லு," என்று கார்த்திக் நித்யாவிடம் கேட்க,

சிறிது நேரம் அவளை கலக்காமாக பார்த்தவள், "ஏன் மாமா, என்னால இந்த படிப்பை படிச்சு டிகிரி வாங்க முடியாதா? பாப்பா பிறந்து அவ கொஞ்சம் வளரும் வரைக்கும் நான் படிப்பை பத்தி நினைக்க கூடாதில்ல," என்று தன் மனதில் உள்ள குழப்பத்தை கேள்வியாக கேட்டாள்.

"அப்படி ஏன் நீ நினைக்கிற? நீதானே பாப்பா பிறக்கறதுக்கு முன்னமே காலேஜ் படிப்பு முடிஞ்சிடும், அதனால பயப்படாதீங்கன்னு எனக்கு தைரியம் சொன்ன, ஆனா இப்போ நீயே இப்படி பயப்படலாமா?"

"பார்த்தீங்கல்ல, ஆரம்பத்தில் வாந்தி மயக்கம், இப்போ ப்ளட் ப்ரஷர்னு ஹாஸ்பிட்டலில் வந்து படுத்திருக்கேன். அப்புறம் மாசம் கூட கூட உடம்புல ஏதாவது பிரச்சனை வந்துட்டு தான் இருக்குமாம்,"

"உனக்கு அப்படி யார் சொன்னது?"

"அம்மா தான் மாமா சொன்னாங்க, காலேஜூக்கு போக வேண்டாம்னு சொன்னாங்க, ஆனா எனக்கு நல்லப்படியா இந்த படிப்பை முடிக்கணும்னு இருக்கு, ஆனா முடிக்க முடியாது போலன்னு நினைச்சு பயம் வருது."

"இங்கப்பாரு நித்தி, எல்லாத்துக்கும் நம்ம மனசு தான் காரணம், ஆரம்பத்தில் எல்லோருக்கும் வாந்தி மயக்கம்னு இருப்பது சகஜம் தான், ஆனா அதுக்குப்பிறகு குழந்தை பிறக்கும் வரையிலுமே ஆஃபிஸ்க்கு வந்து போறவங்களை நம்ம ஆஃபிஸ்லயே நான் பார்த்திருக்கேன். ஏன் வீட்ல எல்லா வேலையும் இழுத்துப் போட்டு செய்யும் பெண்களும் இருக்காங்க, அப்படி இருக்கும்போது படிக்கிறது உன்னால முடியாதா?

அத்தைக்கு ஒரே பொண்ணுன்னு உன் மேல அதிக பாசம், படிப்பு படிப்புன்னு சொல்லி உடம்பை கெடுத்துப்பியோன்னு அவங்க பயப்பட்றாங்க, ஆனா அதுக்காக நீ பயப்படலாமா?

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.