(Reading time: 12 - 23 minutes)
Kaarigai
Kaarigai

வெளிச்சத்தில் தன் கைகளில் இருந்த ரத்த கறையை பார்த்தான்.

"அம்மா கீழ இழுத்து போட்டதுல ஏதோ அடி பட்டிருக்கும் போல" அவன் கைகளில் இருந்த ரத்த கறையை பார்த்தவர் "முருகா வண்டியை சீக்கிரம் எடு. ஏதாவது ஹாஸ்பிடல் கிட்ட நிறுத்து" சொன்னவர் வேகமாக வண்டியின் பின் புறம் ஏறி அவளின் தலையை எடுத்து தன் மடியில் வைத்து கொண்டார்.

அடுத்த சில நிமிடங்களில் அந்த சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த மருத்துவமனை முன் வண்டி நின்றது.

அவளை உள்ளே கொண்டு சென்ற அரை மணி நேரத்திற்கு பின் வெளியே வந்த மருத்துவர், "ஹலோ மேடம் நான் டாக்டர் மைதிலி." சகுந்தலாதேவியிடம் தன்னை அறிமுக படுத்தி கொண்டார்.

"வணக்கம் மேடம். நான் சகுந்தலா தேவி" -சகுந்தலாதேவி

"நீங்க தான் அந்த பொண்ணை இங்க அட்மிட் பண்ணினது இல்லையா?" -மைதிலி

"ஆமாம் மேடம் " -சகுந்தலாதேவி

"இந்த பொண்ணு உங்களுக்கு என்ன வேணும்?" -மைதிலி

"நாங்க சென்னை போயிட்டு இருக்கும் போது வழியில இந்த பொண்ணை ரயிலவெ ட்ராக் கிட்ட பார்த்தோம். மத்தபடி எங்களுக்கு இந்த பொண்ணை பத்தி தெரியாது" சகுந்தலாதேவி சொல்லவும் டாக்டர் சிறிது நேரம் யோசனைக்கு உள்ளானார்.

"ஏதாவது பிரச்சனையா?" அவரின் அமைதியை கண்ட சகுந்தலாதேவி கேட்க, "ஆம்" என்பதாக தலையை அசைத்தவர் அருகே இருந்த முருகனை பார்த்தார்.

'இவர்??" கேள்வியோடு சகுந்தலாதேவியை பார்க்க, "இவர் பேரு முருகன். என் டிரைவர்" எனவும் "சரி நீங்க இங்க வெயிட் பண்ணுங்க. மேடம் நீங்க மட்டும் ஏன் கூட கொஞ்சம் வர முடியுமா?" டாக்டர் மைதிலி கேட்க, அவருடன் நடந்தார் சகுந்தலா.

"மேடம், ஷி வாஸ் பிரெக்நண்ட்" டாக்டர் சொல்ல அதிர்ந்து போனார் சகுந்தலாதேவி.

"டாக்டர் என்ன சொல்றிங்க? அவளை பார்த்தா ரொம்ப சின்ன பொண்ணா இருக்கு " அதிர்ச்சி விலகாமல் சொன்னார் சகுந்தலாதேவி.

"எஸ். அந்த பொண்ணுக்கு ஒரு பதினஞ்சு பதினாறு வயசு தான் இருக்கும். மைனர் கேர்ள் ... இட் ஷுட் பி ரிப்போர்ட்டெட் டு போலீஸ்" மைதிலி சொல்ல, "ஷி வாஸ் பிரெக்நண்ட் னு சொன்னிங்களே...அப்படினா?" சகுந்தலாதேவி கேட்க, "அபார்ட் ஆயிருக்கு " மைதிலி சொல்லவும் "ஓஹ் மை காட்" தலையில் கையை வைத்தார் சகுந்தலா.

"டாக்டர் டாக்டர்" அதற்குள் ஒரு நர்ஸ் ஓடி வர, "என்னம்மா என்னாச்சு" அவரின் பதற்றம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.