(Reading time: 12 - 23 minutes)
Kaarigai
Kaarigai

தொடர்கதை - காரிகை - 10 - அமுதினி

சுற்றம் என்ன சொன்னாலும்

தூய்மை ஒன்று தான் சொந்தம்

காவல் காக்கும் எந்நாளும்

கற்பு என்னும் தீப் பந்தம்

புது யுகம் மகள் இவள் அணிகின்ற வளையல்கள்

சிறைகளை உடைத்து விடும்

ந்த ரயில்வே கிரஸிங்கில் சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த காரில் பின்புறம் இருந்த இருக்கையில் கண்களை மூடி அமர்ந்திருந்தார் சகுந்தலாதேவி. டிரைவர் இருக்கையில் இருந்த முருகன் தன் கையில் இருந்த கடிகாரத்தில் நேரம் பார்த்தான். நேரம் இரவு இரண்டு மணி என்றது.

ரயில் வருகிறதா என பார்த்த முருகன் கண்கள் கூர்மையானது. அவனது முகம் அதிர்ச்சியில் உறைந்தது. சுதாரித்து கொண்டவன், "அம்மா அம்மா" பின்னால் இருந்த சகுந்தலா தேவியை அழைக்க, கண்ணை திறந்தவர், "என்ன முருகா?" என்றார்.

"அம்மா அங்க டிராக்ல ஒரு பொண்ணு மாதிரி இருக்கு. பாருங்க" முருகன் சொல்ல தன் கண்ணாடியை அணிந்தவர் சற்றே கூர்ந்து கவனித்தார்.

வேகமாக நடந்து கொண்டிருந்த பெண்ணை கண்டவர் "ஐயோ முருகன் ஆமாம். ட்ரெயின் வர மாதிரி இருக்கு, சீக்கிரம் போ" சகுந்தலாதேவி சொல்ல, ஒரு நொடி தாமதிக்காமல் இறங்கி ஓடினான் முருகன்.

"இந்தா பொண்ணு நில்லு " முருகன் கத்தி கொண்டே ஓட, சாவை தேடி சென்று கொண்டிருந்த பவித்ராவின் காதுகளில் அதெல்லாம் விழவே இல்லை.

ட்ரெயின் அவளை நெருங்க போவதை உணர்ந்த முருகன், படாரென அவளின் கையை பிடித்து இழுத்து வீசினான் அவளை அங்கிருந்த புதர்களின் பக்கமாக. அவனின் பின்னால் ஓடி வந்த சகுந்தலாதேவி, " முருகா என்னாச்சு ?" அவளை இழுத்து போட்ட வேகத்தில் கீழே விழுந்து கிடந்த முருகனை தூக்கி விட்டவர் அவனுக்கு அந்த புறமாக கிடந்த பவித்ராவின் அருகே ஓடினார்.

"ஐயோ மயக்கமாயிட்டா போல. முருகா, இந்த பொண்ணை தூக்கிட்டு வண்டிக்கு போக முடியுமா?" சகுந்தலாதேவி கேட்க, "சின்ன பொண்ணு தான்மா. நான் தூக்கிட்டு வரேன்" என்றவன் அவளை கைகளில் அள்ளி எடுத்து கொள்ள, அவன் முன்னே ஓடியவர் காரின் கதவை திறந்து வைத்தார்.

அந்த காரின் பின்னாடி இருக்கையில் அவளை கிடத்திய முருகன், காரின் விளக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.