(Reading time: 12 - 23 minutes)
Kaarigai
Kaarigai

பேச முயற்சித்து கொண்டிருந்தார்.

"ஹலோ எப்படி இருக்கீங்க?" என்றபடி அவளருகே புன்னகையுடன் அமர்ந்தார் மைதிலி.

எல்லோரையும் மிரட்சியுடன் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் தவிர அவள் எதுவும் பேசவில்லை. அந்த இடத்தையே சுற்றி பார்த்து கொண்டு இருந்தவளிடம் "இது ஹாஸ்பிடல். நான் டாக்டர் மைதிலி. இவங்க சகுந்தலாதேவி. இவங்க தான் உன்னை இங்க கூட்டிட்டு வந்தாங்க " டாக்டர் சொல்லவும் பவித்ராவின் பார்வை சகுந்தலாதேவியிடம் வந்தது. அவளின் தலையை ஆதரவாக கோதினார் சகுந்தலாதேவி.

"உன் பேரு என்னம்மா?" எத்தனை மென்மையாக கேட்க முடியுமோ அவ்வளவு மென்மையாக வந்தது அவரது குரல்.

....

"உன்னை டிஸ்சார்ஜ் பண்ண சொல்லிட்டாங்க. நீ என்கூட வரியா?" என்ற சகுந்தலாதேவியின் கேள்வியில் அவளின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரே பதிலாக இருந்தது.

"சரி அழாத. உன் கிட்ட நான் ஒண்ணும் கேட்க மாட்டேன். சரியா? உனக்கு எப்ப தோணுதோ அப்போ நீ சொன்னா போதும். என் கூட சென்னைக்கு வரியா? நான் உன்னை நல்லா பார்த்துக்கறேன்" சரி என பவித்ரா தலை அசைக்க சகுந்தலாதேவி டாக்டரை பார்த்தார். அவரும் ஆமோதிப்பாக தலை அசைக்கவும் "உன்னை என் கூட கூட்டிட்டு போகணும்னா உன் பேரை இந்த பார்ம்ல எழுதணும் அப்போ தான் டிஸ்சார்ஜ் பண்ணுவாங்க. உன் பேரை மட்டும் சொல்லு." சகுந்தலா பரிவோடு கேட்டார்.

"ப...ப...பவித்ரா" உலர்ந்து போன உதடுகளுக்கு இடையே வார்த்தைகள் திக்கி திணறி வர, அங்கிருந்த நர்ஸ் ரிப்போர்ட்ஸ்சில் அவளின் பெயரை எழுதி கொண்டார்.

அதற்க்கு பின் மைதிலியும் சகுந்தலாவும் அவளிடம் கொஞ்சம் கொஞ்சமாக பேசி அவளை பயணத்திற்கு தயார் செய்தனர். அந்த மருத்துவமனையில் இருந்து வெளியே வரும்போது கோழிக்குஞ்சை போல பயந்து நடுங்கி அங்கிருக்கும் ஒவ்வொரு ஆணையும் ஏதோ ஒரு கொலைகாரனை போல பார்த்து மிரண்டு வந்தவள், காரில் டிரைவர் இருக்கையில் இருந்த முருகனை கண்டு வண்டியில் ஏறாமல் அழ அவளை பேசி சமாதானப்படுத்தி அழைத்து வருவதே பெரும்பாடாகி போனது.

சென்னை வந்ததும் அவளை ஆஸ்ரமத்திற்கு அனுப்பாமல் தன்னுடனே தன் வீட்டிலேயே தங்க வைத்தார் சகுந்தலாதேவி. எப்போதும் வெறித்து பார்த்து கொண்டு ஏதேனும் ஒரு சின்ன சத்தம் கேட்டால் கூட பயந்து நடுங்கி கொண்டு சாப்பிடாமல் இறுகி போயிருந்தவளை மனநலமருத்துவரிடம் அழைத்து சென்றார் சகுந்தலாதேவி. அவரின் ஆலோசனையின் பேரில்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.