(Reading time: 12 - 24 minutes)
Verena nee iruppin.. Verethum vendame
Verena nee iruppin.. Verethum vendame

தொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே!! - 20 - சித்ரா. வெ 

ன்னால் தான் இப்படி ஆனதாக கார்த்திக் சொல்வதை கேட்டு நித்யா அவனை அதிர்ச்சியாக பார்க்க,

"என்னப் பார்க்கிற? நான் சொன்னது உண்மை தான், குழந்தையையும் படிப்பையும் போட்டு நீ குழப்பிக்கிற, அதுதான் உண்மை." என்று அவன் கூறினான்.

"என்ன சொல்றீங்க மாமா? எனக்கு ஒன்னும் புரியல," என்று அவள் கேட்க,

"இங்கப்பாரு நித்தி, உன்னை காலேஜில் போய் படிக்க சொன்னது உன்னோட பேருக்கு பின்னால ஒரு டிகிரி போட்டுக்கணும், என்னோட மனைவி டிகிரி முடிச்சவன்னு எல்லோர்க்கிட்டேயும் பெருமையா சொல்றதுக்கோ இல்ல, நீ உலக அனுபவத்தை ஓரளவுக்காவது கத்துக்கணும்னு தான், அதுக்காக படிப்பை பாதியில் விடுன்னு சொல்ல வரல, நம்ம வாழ்வாதரத்தை உயர்த்திக்க படிப்பு அவசியம் தான், ஆனா அதை நீ குழந்தையோட போட்டு குழப்பிக்கிறது தான் தப்பு.

நீ படிக்கணும்னு நான்தான் சொன்னேன். அப்போதே குழந்தை வேண்டாமென்பதில் நாம கவனமா இருந்தோம், இன்னுமே கவனமா இருந்திருக்கணும், அது நம்ம தப்பு. இப்போ நம்மள மீறி குழந்தை உருவாகிடுச்சு, கடவுள் கொடுத்த உயிரை அழிக்க நமக்கு உரிமை இல்லை. இப்போ உனக்கு ஏற்பட்ட பிரச்சனையில் ஒருவேளை குழந்தைக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா பரவாயில்லை பிறகு இன்னொரு குழந்தை பெத்துக்கலாம்னு  நினைச்சு விடலாம், ஆனா உனக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா என்ன செய்ய? அப்போ நீ நினைச்ச டிகிரியும் முடிக்க முடியாது. குழந்தையையும் நல்லப்படியா பெத்துக்க முடியாது. புரிஞ்சுதா?

அதில்லாம உனக்கேதும் ஆச்சுன்னா என்னால அதை தாங்கிக்க முடியுமா? இல்ல வீட்ல மத்தவங்க தான் தாங்கிப்பாங்களா?  சொல்லு." என்று அவன் விளக்கமாக எடுத்து கூறினான்.

"இப்போ நான் என்ன மாமா செய்யணும்? எனக்கு ஒன்னும் புரியல, நீங்க சொல்லுங்க அதை நான் செய்றேன்." என்று அவள் கூற,

"முதலில் உன்னோட ப்ளட் பிரஷர் குறையணும், அதுக்கு குழந்தை பிறக்கும் வரை நம்மாள படிக்க முடியாதான்னு யோசிக்கிறத விடு. எத்தனை வயசுல வேணும்னாலும் படிக்கலாம், எவ்வளவு வேணும்னாலும் படிக்கலாம், அதுக்கு முதலில் நாம ஆரோக்கியமா இருக்கணும் புரிஞ்சுதா?

அதுக்காக உன்னை காலேஜூக்கு போக வேண்டாம்னு சொல்லல, உன்னால முடியும்போது காலேஜூக்கு போ. ஃப்ரண்ட்ஸ் கொடுக்கும் நோட்ஸ் வச்சு படி. முடிஞ்ச வரை படிச்சதை வச்சு எக்சாம் எழுது. அப்படி ஒருவேளை எழுத முடியலன்னா அதுக்காக வருத்தப்படாத, அடுத்தமுறை எழுதிக்கலாம்னு நினைச்சு ஈஸியா விடு. அதைவிட்டுட்டு என்ன

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.