மன்வீர்.....உன்ன சரியா புரிஞ்சிக்காம உன்ன நான் ரொம்ப காயப்படுத்திட்டேன் உன்ன மட்டுமில்ல நான் யாரையும் சரியா புரிஞ்சிகல நான் என் கமலுக்கு பண்ண பாவத்துக்கு நல்லா அனுபவிச்சுட்டேன் பிசினஸ் காசு பணம் ஸ்டேட்டஸ் தான் முக்கியம்னு நான் ரொம்ப திமரா கர்வமா எல்லார் கிட்டயும் நடந்துகிட்டேன் இப்ப பாரு நான் ஒரு கொலகாரியா நிக்கிறேன் எல்லாமே என்ன விட்டு பறந்து போச்சு சி. இ. ஓ ரதிய கொலகார ரதினு இனி எல்லாரும் சொல்ல போறாங்க என ரதி சொல்ல மேடம்...அப்படிலாம் எதும் சொல்லதீங்க நான் உங்கள அப்படி விட்டுற மாட்டேன் தேவேஸ்வர் ஒன்னும் காந்தியும் இல்ல பகத் சிங்கும் இல்ல அவன் கொன்னதுக்கு வருத்தபடுறதுக்கும் ஜெயிலுக்கு போறதுக்கும் அவனே ஒரு கொலைகாரன் கொள்ளைக்காரன் அயோக்யன் துரோகி இப்படி சொல்லிட்டே போலாம் நம்ம பக்கம் நியாயம் இருக்கு உண்மை இருக்கு எவிடன்சும் இருக்கு உங்கள கண்டிப்பா வெளிய கொண்டு வந்துருவேன் என்ன நம்புக ட்ரஸ்ட் மீ மேடம் என மன்வீர் சொல்ல மன்வீரின் கையை பிடித்த ரதி சிறு புன்னகையுடன் இதலாம் இருக்கட்டும் மன்வீர் எனக்கு இப்ப தேவையானது ஒண்ணே ஒன்னு மட்டும் தான் என் பொண்ணு சாரவ நீ தான் என்னைக்கும் பத்திரமா பத்துக்கனும் நல்ல நண்பனா காதலனா கணவனா உன்னால அது முடியுமா என் சாரா உன்கிட்ட இருந்தா அது முடியுமா என் சாரா உன்கிட்ட இருந்தா அது முடியாம என் சாரா உன்கிட்ட இருந்தா தான் சந்தோசமா நிம்மதியா பாதுகாப்பா வெச்சிக்க முடியாது என சாரவின் கையை பிடித்து இருவரின் கையையும் சேர்த்து வைத்த பரதி என்ன மன்வீர் இதுக்கு உனக்கு சம்மதமா என கேட்க
சற்று யோசித்த மன்வீர் இல்ல மேடம்... என கூறினான்.
என்ன மன்வீர் சாரவ உனக்கு பிடிக்கலயா அவ எதாவுது உன் கிட்ட தப்பா நடந்துகிட்டலா என டென்ஷனுடன் ரதி கேட்க
இல்ல...இல்ல...மேடம் நான் சாரக்கு நல்ல நண்பனா... காதலனா... கணவனா....இருக்கணும்னு சொன்னீங்களே தவிர நல்ல பாடிகார்ட்டா இருக்குனும்னு சொல்லலியே அதுக்காக தான் இல்லன்னு சொன்னேன் என மன்வீர் சொல்ல ஓ மை காட் நான் வேற என்ன ஏதோணு பயந்தே போய்ட்டேன் அப்ப என் சாராவ நீ லவ் பண்ற அது உண்ம தான என ரதி கேட்க
ம்.... என சொல்லி சாரவின் கையை இறுக்கமாக பிடித்தான் மன்வீர்.அப்பாடா எப்படியோ நீங்க ரெண்டு பேரும் கடைசியா ஒன்னா சேந்தூடீங்களா சூப்பர்....டா என மன்வீரை தோலை தட்டினான் கவின்.ஐ அம் எஸ்ட்ரிமில்லி சாரி சாரா நான் உனக்கு பண்ண த்ரோகத்துக்கு மன்வீர் மாரி ஒரு பையன தேடுனாலும் கடைக்க மாட்டன் என வேத் சொல்ல இனிமேல் சாரி