(Reading time: 17 - 33 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

நாங்க இன்னும் கொஞ்ச வருஷம் லவ் போறோம் சண்ட போட போறோம் ஊர் சுத்த போறோம் ஒருத்தர ஒருத்தர் இன்னும் நல்லா புரிஞ்சிக்க போறோம் அதனால இப்ப நாங்க கல்யாணம் பண்ணிக்க போறதில்ல என மாரி மாரி சாரவும் மன்வீரும் சொல்ல ஓ... ஓ... என மறுபடியும் அனைவரும் கோரசாக சொல்ல அங்க பாருங்க என்று சாரா திடீரென சொல்ல அனைவரும் திரும்பி பார்த்த தருணத்தில் மன்வீரின் கை பிடித்து இழுத்து ஓட தொடங்கிய சாரா ஹலோ..... நானும் என் பாடி கார்டும் வெளிய போறோம் எங்கள தேடாதீங்க ஊர சுத்தி முடிச்சதும் நாங்களே நைட் வீட்டுக்கு வந்துரோம் பாய் மாம் பாய் கைஸ் என சொல்லி கொண்டே மன்வீரை இழுத்து சென்றால் சாரா.

இரண்டு மாதத்திற்கு பின் அசாமில்....

நீலமும்  வெள்ளையும் கலந்து மேகங்கள் ஆங் ஆங்கே பரவி கிடக்க  தெளிவான வானம் இளம்பச்சையாக வளந்து பூத்து கிடக்கும் மரஞ்செடிகள் மிதமான வெயிலோடும்  லேசான குளிரோடோம் இருக்கும் இயற்கை அழகை பார்த்து ரசித்து கொண்டே அங்கே புல்லை மேய்ந்து கொண்டிருந்த பசுக்களுக்கு தண்ணீர் வைத்தும் பறவைகளுக்கு விதைகளை தூவி கொண்டும் உற்சாகத்தில் மிதந்து கொண்டிருந்தான் மன்வீர்.

ஹலோ மை பாடி கார்ட் மன்வீர்......ஹலோ எப்படி இருக்க என சாரா கையில் இருக்கும் சூட் கேஸை தூக்கி போட்டு விட்டு கையை ஆட்ட

ஏ....சாரா எப்ப வந்த அதுவும் இங்க எப்படி என மன்வீர் ஷாக்குடன் கேட்க

ம்..... நல்ல கேள்வி நானே அப்ராட் ஷூட்டிங்க முடிச்சிட்டு ரெண்டு மாசமா உன்ன பாக்கா முடியாம நேர்ல பேச முடியாம உன்ன கட்டி பிடிச்சி கிஸ் குடக்க முடியாம ஒரே லவ் சிக் ஆகி மெண்டலாகி டெய்லி வீடியோ கால்ல பாத்த  உன்ன ஒடனே பக்கணும்னு சென்னைக்கு கூட போகாம ஸ்ட்ராயிட்டா பிலைட்ட புடிச்சி அசாம்க்கு வந்து எறங்குனா என்ன ஓடி வந்து கட்டி பிடிச்சி நச்சுன்னு கிஸ் கொடுக்காம.. நீ என்ன ஏதுன்னு என்ன கேள்வி கேக்குரியா ம்ம் ..என சாரா உறும

அது இல்ல சாரா உன்ன பாத்த அதிர்ச்சியில எனக்கு கையும் ஓடல காலும் ஓடல என மன்வீர் சொல்ல

இந்த ரெண்டு மாசத்துல என்ன என்ன நடந்துச்சு... என் படம் டெத் ரேஸ் சூப்பர் ஹிட் ஆயிடுச்சு வேத் அப்பாவாக போறான் உன் க்ளோஸ் பிரின்ட் கவின எங்கம்மா திவான் குறூப் ஓட மேனஜர் அப்பாய்ண்ட் பண்ணிட்டாங்க விக்கி எப்பயும் போல ப்ரோடுக்ஷன் ஈவெண்ட்னு பிசியா இருக்கான் எங்கமாவும் திவான் குரூப்போட  டெவெளப் மெண்ட்காக ஓடா

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.