(Reading time: 7 - 14 minutes)
Gayathri manthirathai
Gayathri manthirathai

தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 31 - ஜெய்

Hi Friends,  உலகம் முழுவதும் covid 19 வைரஸால் மக்கள் பீதியில் இருக்காங்க... எல்லாரும் உங்களுடைய இல்லங்களில் பாதுகாப்பா இருங்க... அரசாங்கம் சொல்வதை பின்பற்றுங்க... சீக்கிரமே இந்த நிலை மோசமடையாம நல்லபடியா மாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்... அப்பறம் இந்த கதை முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கு... இன்னும் 2-3 அப்டேட்ல முடிஞ்சுடும்... ஏன் சக்தி, காயத்ரி சீன் இல்லைன்னு நிறைய மெசேஜ் வருது ... எடுத்த சப்ஜெக்ட்ல சக்தியை மட்டும் ஹீரோவா வச்சு எழுதறது கஷ்டம்... ஒருத்தனே சாகசம் செய்து அத்தனை வில்லனையும் ஒழிக்கறது எல்லாம் சினிமால நடக்கும்.... நிஜத்துல நூறு சதம் சாத்தியம் இல்லை என்பது என் கருத்து... அதனால சக்தி மற்றும் காயத்ரியை வச்சு அடுத்து ஒரு முழு நகைச்சுவை கதை கொடுத்து ஈடு கட்டிடறேன்... கதையை தொடர்ந்து படிச்சுட்டு வர்ற friends எங்கியாவது ஏதாவது ஓட்டை விட்டுருக்கேனான்னு சொல்லுங்க... வர்ற அப்டேட்ஸ்ல அதை அடைச்சுடறேன்... Take care and be safe friends.....

க்தியின் அன்னை வீடு திரும்ப காயத்ரியின் அன்னை எங்கோ வெளியில் செல்ல கிளம்பி வந்து கொண்டிருந்தார்...

“வெளிய கிளம்பிட்டீங்க போல...”

“ஆமாம்... கொஞ்சம் சாமானெல்லாம் வாங்கணும்... அப்படியே காயத்ரிக்கு அடுத்த மாசம் பொறந்தநாள் வரது... அதுக்கும் புது டிரஸ் வாங்கிண்டு வந்துடலாம்ன்னு காயத்ரியை மாம்பலத்துக்கு நேரா கடைக்கு வர சொல்லிட்டேன்... இப்போதான் காலேஜ்லேர்ந்து கிளம்பினேன்னு போன் பண்ணினா....”

“ஓ நீங்க எப்படி போறீங்க...”

“இங்க இருந்து பத்து நிமிஷம் நடந்தா பஸ் ஸ்டாப் வந்துடும்... அங்க இருந்து நேரா பஸ் இருக்கு...”

“இருங்க நான் டாக்ஸி புக் பண்ணுறேன்... அதுலயே போய்டுங்க...”

“நேக்கு டாக்ஸி, ஆட்டோல எல்லாம் தனியா போக பயம்... அதுனால பஸ்லயே போறேனே...  கூட காயத்ரியோ, அவ அண்ணாவோ இல்லைனா நான் ஏறவே மாட்டேன்....”

“இல்லை இன்னும் கொஞ்சம் நாளைக்கு நீங்க தனியா அதுவும் கார் இல்லாம எங்கயும் போகாதீங்க....”

“அச்சோ எனக்கு பஸ்ல போறதெல்லாம் பழக்கம்தான்... ஜாகிரதையா போய்டுவேன்.... காயத்ரியைத்தான் உங்காத்து கார் டிரைவர் கூட்டிண்டு வந்துடுவாரே... அதனால கவலைப்படாதேள்...”

“காயத்ரி மட்டும் இல்லை... நீங்களும் எங்க பொறுப்புதான்... அதனால தனியா போக வேண்டாம்... வீட்டுல இத்தனை கார் இருக்கு... அப்பறம் என்ன... ஷாப்பிங்லயும் கவனமா இருங்க... வெளிய ரொம்ப நேரம் இருக்க வேண்டாம்... முடிஞ்ச வரைக்கும் சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுங்க...”, சக்தியின் அன்னை சொல்லியபடியே தங்கள் வீட்டில் இருந்த மற்றொரு காரில் அவரை ஏற்றி அனுப்பினார்...

அவர் கிளம்பியபிறகும் சக்தியின் அன்னைக்கு கவலையாகவே இருந்தது.... ஏதோ நடக்கப்போகிறது என்று அவர் உள்மனது சொல்லியபடியே இருக்க அவர் சக்திக்கு அழைத்து காயத்ரியும், அவள் அன்னையும் வெளியில் சென்றிருப்பதை பகிர,

“பரவாயில்லைம்மா... போயிட்டு வரட்டும்... அதுதான் கணேஷண்ணன் கூட இருக்கார் இல்லை... அவரை பார்த்துக்க சொல்லலாம்... அதுவும் அவங்க போறது நல்ல கூட்டமான இடம்... அதனால எதுவும் ஆகாது.... கவலைப்படாம இருங்க...”, சக்தி கூற அவன் அன்னையும் கார் ஓட்டுனரை அழைத்து அவர்களை கவனமாக பார்த்துக்கொள்ளும்படி கூறினார்...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.