(Reading time: 7 - 14 minutes)
Gayathri manthirathai
Gayathri manthirathai

காயத்ரியின் அருகில் யாரோ ஒட்டியபடியே வருவதை பார்த்த அவள் அன்னை கோவத்துடன் நிமிர...

“இங்க பாரும்மா பேசாம நாங்க சொல்றதை கேட்டு என்கூட வாங்க... உன் பொண்ணு முதுகுல விஷம் தடவின கத்தி இருக்கு... எதுனாச்சும் சத்தம் கேட்டுச்சு ஒரே குத்துதான்... அடுத்த செகண்ட் உன் பொண்ணு பரலோகம் போய்டும்... புரியுதா...”, அந்த அடியாள் மிரட்ட இருவரும் பயந்தபடியே அவர்களை பின்பற்றினார்கள்....

கடைக்கு சென்று அரை மணியில் வந்துவிடுவோம் என்று சென்றவர்கள் கிட்டத்தட்ட இரண்டு  மணி நேரமாகியும் வராமல் போக டிரைவருக்கு சிறிது பயம் வர ஆரம்பித்தது... அவன் காயத்ரியின் தொலைபேசிக்கு அழைக்க அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது... கடையின் உள்ளே சென்று பெண்கள் தளம் முழுவதும் தேட எங்கும் அவர்கள் இருந்தற்கான அறிகுறியே காணவில்லை... பதட்டப்பட்ட டிரைவர் சக்தியை அழைத்து விஷயத்தை கூற அடுத்த அரை மணியில் சக்தி அவ்விடத்தை அடைந்தான்...

இரவு வரை பல வழிகளில் தேட காயத்ரியும், அவள் அன்னையும் மாயமாக மறைந்திருந்தார்கள்....

அதே நேரத்தில் பதினைந்து கல்லூரி மாணவர்களும் வேறு வேறு இடங்களில் காணாமல் போனதாக தகவல் வர காவல்துறை பல இடங்களில் முடக்கிவிடப்பட்டது...

மறுநாள் காலையில் துயில் எழுந்த இந்தியாவே அதிர்ந்து இருந்தது.... காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் இரவோடிரவாக கைது செய்யப்பட்டிருந்தார்கள்.... அவர்களில் முக்கால்வாசிப்பேர் பெரும் புள்ளிகள் மற்றும் அரசியல்வாதிகள்....

சானல்கள் அனைத்திற்கும் அசுரத் தீனி.... எங்கு சென்று யாரை பேட்டி எடுப்பது என்று தெரியாமல் திணறினார்கள்.... திரும்பிய பக்கமெல்லாம் குற்றவாளிகளாக இருந்தால் அவர்களும் என்ன செய்வார்கள்.... ஆளும் கட்சியின் சதி என்று சொல்லக் கூட முடியாமல் ஆளுகின்ற கட்சியின் ஆட்களே பல இடங்களில் கைது செய்யப்பட்டிருந்தார்கள்...

இந்தியா முழுவதிலும் ஒரே நாளில் அதுவும் இத்தனை பிரமுகர்கள் எனும்போதில் ஆர்பாட்டத்திற்கு கேட்க வேண்டாமே... காவல் துரையின் அராஜகம் என்று பல்வேறு கட்சிக்காரர்கள் போராட்டங்களை ஆரம்பிக்க... நாடு முழுவதும் கொந்தளிக்கும் நிலை ஆரம்பித்தது....

பிரதமர் உடனடியாக நாட்டு மக்களிடையே தோன்றி அனைவரையும் அமைதி காக்கும்படியும்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.