(Reading time: 13 - 26 minutes)
Uyiril kalantha urave
Uyiril kalantha urave

அவங்க முன்னாடி கடுமையா நடந்துக்காதே! ப்ளீஸ்..!" ஏன் இவன் இப்படி இருக்கிறான்? எப்படி இவனால் மட்டும் இப்படி இருக்க முடிகிறது? அக்கணம் ஒரு அதிசயத்தினைக் காண்பதாய் அவனை நோக்கினாள் சிவன்யா!

"என்னால உடனே எதையும் மறக்கவோ, மன்னிக்கவோ முடியும்னு தோணலை!" என்றவளின் கேசத்தினை அன்போடு வருடினான் அசோக்.

"டைம் எடுத்துக்கோம்மா! ஆனா, ப்ளீஸ்..! காயப்படுத்தாதே!" என்று உரைத்துவிட்டு சென்றான் அவன். வெளியே திக்கற்று பித்துப்பிடித்தவராய் நின்றிருந்த மீனாட்சியினைக் காணவே மனம் வலித்தது அவனுக்கு!

"மா!" என்ற குரல் அவர் செவிகளில் விழ, உறைந்துப் போய் அவனை நோக்கினார் மீனாட்சி!

"அவ பேசுனதை பெரியதா எடுத்துக்காதீங்கம்மா! அவளுக்கு பதிலா நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன்! நீங்க எங்களை ஏற்றுக்கொண்டதே சந்தோஷம்மா!" என்று கரம் குவித்தவனின் கரங்களைப பற்றி கண்ணீரால் கரைந்தார் மீனாட்சி!

"என்னை மன்னித்துவிடுப்பா! நான் உன்னை எவ்வளவோ கஷ்டப்படுத்தி இருக்கேன். ஆனா, இன்னிக்கு அதை எல்லாம் மறந்துட்டு எனக்காக வந்து பேசுற! நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்! நான் சிவன்யாக்கு நல்ல அம்மாவா இல்லை..." என்றதும் பதறிப் போனான் அசோக்!

"அப்படியெல்லாம் பேசாதீங்கம்மா! அவ உங்கப் பொண்ணு! கொஞ்ச நாளில் உங்களைத் தேடி வந்துவிடுவாள்! நான் எப்போதும் உங்களை என் அம்மாவாக தான் பார்க்கிறேன். அம்மா திட்டுனா யாராவது கோபப்படுவாங்களா சொல்லுங்க?" வாயடைத்துப் போனார் மீனாட்சி.

"நீ எனக்கு மறுமகனா கிடைக்க நான் என்னப் புண்ணியம் பண்ணேனோ தெரியலை! என்னை மன்னித்துவிட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லுப்பா!" ஒரு காலத்தில் யாரை அவமானம் என்றாரோ, இன்று அவரையே புண்ணியம் என்கிறார்! செய்த கர்மமானது ஒருவரை தண்டிக்கும் மார்க்கும் உண்மையில் விசித்ரமானது தான்!

"மன்னிக்க இதில் என்ன இருக்கு சொல்லுங்க?  நடந்து முடிந்தது எல்லாம் வேணாம்மா! நாம நடக்கப் போறதை மற்றும் பார்க்கலாம்! உங்க மேலே எப்போதும் எனக்கு மரியாதை இருக்கு! கவலைப்படாதீங்க..! எல்லாம் சரியாகிவிடும்" இந்த எல்லாம் சரியாகிப்போகும் என்ற வார்த்தையில் தான் எவ்வளவு மகத்துவம் உள்ளது. இழந்த நம்பிக்கைக்கு உயிர்கொடுக்கும் நம்பிக்கை! அவர்கள் உரையாடிக் கொண்டிருக்க, மௌனமே  உருவாய் வெளி வந்தாள் சிவன்யா. ஏதோ பெரும் எதிர்ப்பார்ப்புகளோடு அவள் முகத்தினை நோக்கினான் அசோக்! எங்கோ வெறித்தப்படி தன் தாயிடம்,

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.