(Reading time: 13 - 26 minutes)
Uyiril kalantha urave
Uyiril kalantha urave

அவளுக்கு!

"அவங்க அப்படி நடந்துக்கலைங்க!" என்று கண்ணீரால் கரைந்துவிட்டாள் அவள்.

"உங்களுக்குத் தெரியாது..! அவங்க என்ன எல்லாம் பேசுனாங்கன்னு! எப்படிங்க என்னால எல்லாத்தையும் மறந்து மன்னிக்க முடியும்? நான் என்ன அவ்வளவு கேவலமா போயிட்டேனா?" கதறி அழுதவளின் வேதனையை அவன் உணராமல் இல்லை.

"என்னைப் பாரு..!முதல்ல அழுவதை நிறுத்து!" அவள் கரத்தினை தன் கரத்துள் பொதித்தான் அசோக்.

"நம்ம கடந்துக்காலத்துல நடந்த சில விஷயங்களுக்காக! நிகழ்காலத்துல இருக்குற சந்தோஷத்தை நாம தொலைத்துவிடுறோம்! ஒருத்தவங்க தப்பு பண்ணி இருந்தாலும், மனப்பூர்வமா மன்னிப்புக் கேட்கும் போது அவங்களை மன்னிக்கிறதுல என்ன இருக்கு? அவங்க உன் அம்மா!" அவன் மனசலனம் செய்வது அவளிடத்தில் எடுப்படவில்லை.

"அம்மான்னா, என்ன வேணும்னாலும் பேசலாமா?" என்றாள் சற்றே கோபமாக! அவள் கன்னத்தினை ஆறுதலாக தாங்கியவன், ஒரு புன்னகையோடு,

"நான் அவங்களை நியாயப்படுத்த வரலை! அவங்களை மன்னித்துவிடுன்னு சொல்ல வந்தேன்! சிவா, நீ எவ்வளவு கொடுத்து வைத்தவள்னு உனக்குத் தெரியாது! உன் கல்யாணத்தை பார்க்க இன்னிக்கு உங்க அம்மா உன் கூட இருந்திருக்காங்க! சில பேருக்கு அந்தப் பாக்கியம் இல்லை தெரியுமா?" என்றத் தொனி அவள் பிடிவாதத்தினை இளக்கியது.

"ஒரு வேதனைப் படுத்தினா, நாம அவங்களைத் திரும்ப வேதனைப் படுத்தணும்னு இல்லைம்மா! மன்னித்தாலே போதும்! அவங்க உன் அம்மா! அவங்களுக்கு உன்கிட்ட தன்னுடைய கோபத்தைக் காட்ட உரிமை இருக்கு! என்ன, அவங்களுக்கு எப்படிக் காட்டணும்னு தெரியலை அவ்வளவுத்தான்! மனசுல இருந்ததை அப்படியே பேசிட்டாங்க! சில பேர் மறைமுகமாக பேசுவாங்க அவ்வளவுத்தான்! இந்த உலகத்துல ஒரு நல்லவங்களைக் காட்டிவிடு, உன் கோபத்துல அர்த்தம் இருக்குன்னு ஒத்துக்கிறேன்!" ஏனோ விழிகள் எடுக்காமல் அக்கணம் அவன் முகத்தினையே கூர்ந்தாள் சிவன்யா!

"நான் எங்க அம்மாக்கிட்ட எவ்வளவு அடி வாங்குவேன் தெரியுமா? நான் வளர்ந்த அப்பறம் கூட, அதை அவங்க நிறுத்தவே

இல்லை! நம்ம கூட இருக்குற வரைக்கும் சில விஷயங்களுடைய அருமை நமக்குத் தெரியாது! அது போன அப்பறம், நாம வருத்தப்பட்டு எந்தப் பயனுமில்லை! நான் உன் இஷ்டத்துக்கே விடுறேன்! அவங்களை மன்னிக்கிறதும் மன்னிக்காததும் உன் இஷ்டம்! என்னைக் கேட்டா, ஒரு வாய்ப்பு தருவதில் தப்பில்லைன்னு சொல்லுவேன்! அட்லீஸ்ட்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.