(Reading time: 13 - 26 minutes)
Uyiril kalantha urave
Uyiril kalantha urave

வெளிச்சமிட்டு வெளிக்காட்டியது.

"எழுந்து அக்னிக்குண்டத்தை மூன்றுமுறை வலம் வாங்க சார்!" என்ற புரோகிதரின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு எழுந்து நின்றனர் அவர்கள்! அவர்களின் சுண்டுவிரல் பற்றி அக்னிச்சாட்சியாய் தத்தம் இருவரும் பகிர்ந்த வாக்குகள் இறைவனால் இயற்றப்பற்ற வாக்குகளாய் நின்றன.

"என் வாழ்வனைத்தும் எச்சூழலில் நான் பற்றிய கரத்தினை என்றுமே கைவிடேன்!"

"என்றும் உன் கௌரவம் என் கௌரவமாய் உருமாறி, தத்தம் இரு குடும்பங்களின் உன்னத உறவினை என்னுயிர் உள்ளவரை பறைச்சாற்றுவேன்!"

"இனி வரப்போகும் சந்ததிகளின் நல்லுறவைப் பேணி என்றும் சிறந்தமுறை ஞானம் போற்றுவேன்!" என்ற மூன்று வாக்குகள் இரு மனங்களுக்கிடையே பரிமாறப்பட்டன.

"பெரியவங்கக்கிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்கோங்க!" எனும் போது ஏனோ இரு நெஞ்சங்களிலுமே ஒரு சறுக்கல்!  தாயின் மேலிருந்த கோபத்தில் சிவன்யாவும், தந்தையின் மேலிருந்து தயக்கத்தில் அசோக்கும் ஒரு நொடி ஸ்தம்பித்த வேளை, பெருமூச்சோடு தன் தந்தையின் பாதத்தில் பணிந்தான் அசோக். முதன்முறை மகன் தீண்டிய  ஸ்பரிசத்தினை உணர்ந்தனர் உறைந்துப் போய் நின்றார். ஆசிகள் மட்டுமன்றி  அனைத்திற்கும் மன்னிப்பையும் வேண்டுவதாய் அமைந்துப் போனது அவன் ஆற்றியப்பணி! பேச்சிழந்துப் போய்  மனதார அவ்விருவரையும் வாழ்த்தினார் சூர்ய நாராயணன். நிச்சயம் தர்மாவும் உடனிருந்து ஆசி வழங்கி இருப்பதில் சந்தேகமில்லை. தயக்கத்துடன் தன் தந்தை முன் நின்றவனின் கண்களில் வேண்டிய மன்னிப்பானது கண்ணீராய் உருமாறி நின்றது. சூழ்நிலை உணர்ந்தவராய் தலையசைத்தார் சூர்ய நாராயணன்.  அவ்வளவுக் கணமும் மனதில் இருந்த மகிழ்ச்சி, ஏனோ தன் தாயிடத்தில் செல்லும் போது மறைந்துப் போனது சிவன்யாவிற்கு! பேசிய வார்த்தைகள் அனைத்தும் நெஞ்சத்தில் ஆறாத வடுவாய் பதிந்திருக்க, அவளும் அவர் பாதம் பணிய விரும்பவில்லை, அவனையும் பணிய வைக்க விழையவில்லை. அதனை உணர்ந்தவனாய், எவரும் அறியா வண்ணம் அவள் கரம் பற்றி அவன் இழுக்க, வேறு வழியே இல்லாமல் பணிந்தாள் சிவன்யா, தந்தையின் பாதத்தினை மட்டும் பணிந்தவளாய்! அனைத்தையும் மறந்தவனாய் அவன் ஆற்றிய காரியம் மீனாட்சியின் கௌரவ சிந்தனையை சுக்கலாய் உடைந்தெறிந்தது. ஊரார் இருக்கிறார் என்றும் பாராமல், தன்னைவிட இளையவன் என்றும் நினையாமல், இருக்கரம் குவித்து அவனிடத்தில் மன்னிப்பை அவன் வேண்ட, தாயின் நிலையில் இருப்பவரின் கரம்பற்றி தடுத்தான் அசோக்! ஒரு புன்னகையோடு, வேண்டாம் என தலையசைத்தவனின் பெருமை உயர்ந்து நிற்க, அதனை விட, அவன் அன்னையின் வளர்ப்பு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.