(Reading time: 12 - 23 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

உடனேயே இந்த விஷயத்தை அதிதிக்கு தெரிவிக்க வேண்டாம். ஏனெனில் அதிதி ஒருவேளை மன வருத்தப்பட வாய்ப்பு உள்ளது. மாலை நேரத்தில் அங்கு அவளை அழைத்துச் சென்றால் போதும்.

 இடையில் அவர் கிருபா வீட்டிற்கு அவளை அழைத்துச் செல்லவேண்டும். அங்கு அபியை அவள் சமாதானம் செய்ய வேண்டிய வேலை இருக்கிறது.

ஒருவேளை அதிதி அஞ்சலையின் இழப்பினால் மனதளவில் பாதிக்கப்பட்டால் அவளால் தெளிவாக அபியிடம் பேசமுடியாது. இரண்டு விஷயத்திலும் அவர் குழம்பிப் போவாள். எனவே இப்போதைக்கு அதை பற்றி சொல்லவேண்டாம் என்று முடிவெடுத்தார்.

அப்பொழுது அங்கு வந்த அதிரதன் கங்காதரனின் கவலை தேய்ந்த முகத்தை பார்த்து..

" அப்பா என்னவானது?. ஏதோ யோசனையில் இருக்கிறீர்களே ?" என்று கேட்டான். அவனிடம் விஷயத்தை சொன்னவர்.

"இதுபற்றி அதிதிக்கு தெரிய வேண்டாம். அஞ்சலையின் வாழ்க்கை முடிந்துவிட்டது. இனி அதைப் பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை. நாம் கவலைப்பட வேண்டியது அபியின் வாழ்க்கை பற்றிதான். ஏற்கனவே நீண்ட நாட்கள் அவள் பாதிக்கப்பட்டு இருக்கிறாள்இனி ஒரு நிமிடம் கூட தாமதிக்க கூடாது என்று நினைக்கிறேன். எல்லா விஷயங்களும் ஒன்று கூடி வரும் இந்த வேளையில் அஞ்சலை பற்றி அதிதிக்கு தெரிவிக்க வேண்டாம். நாம் மாலை திரும்பி வரும்பொழுது தெரிவிப்போம். இப்பொழுது அவளை க்ருபா வீட்டிற்கு செல்வதற்கு அழைத்து  வா". என்று கங்காதரன் சொன்னார்.

அவர் தீவிரமாக பேசியதை கேட்ட அதிரதன் உள்ளுக்குள் தயங்கினாலும்…

" சரி அப்பா!. நீங்கள் சொன்னபடியே செய்வோம் நான் அதிதியை அழைத்து வருகிறேன். வினய் ஏற்கனவே தயாராகி விட்டான். நாம் நான்கு பேரும் கிருபா வீட்டிற்கு செல்வோம்" என்று முடித்தான்.

சற்று நேரத்தில் நான்கு பேரும் கிளம்பி வந்தனர். அங்கிருந்து நடந்து தான் செல்ல வேண்டும் என்று கங்காதரன் கூறினார்.

" எனக்கு தெரியும் அப்பா. நாங்கள் ஏற்கனவே அங்கு சென்று இருக்கிறோம். இப்பொழுது விடியல் நேரம் என்பதால் நாம் நடந்து செல்வது சுலபமாக

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.