(Reading time: 12 - 23 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

இல்லை. அதிதி பேசுவதை அபியால் உணர்ந்து கொள்ள முடியும். இப்பொழுது அதிதியின் மனநிலையை அவள் புரிந்து கொள்வதுதான் முக்கியம். அந்த இடத்தில் நாம் குறுக்கிட வேண்டாம். நாம் அமைதியாக ஹாலில் அமர்ந்து இருப்போம்" என்று கிருபா சொன்னார்.

அறையின் உள்ளே இருந்து அதிதியின் குரல் விம்மலும் கேவலுமாக மெல்லிதாக கேட்டுக்கொண்டே இருந்தது. கூடவே அர்த்தமில்லாத அபியின் குரலும் கேட்டுக் கொண்டே இருந்தது. இருவரும் பேசிக் கொள்ளட்டும் என்று அனைவரும்  ஹாலிற்கு வந்தனர்.

 வினய் அதிரதனிடம் கேட்டான்

" அந்த பெண்ணால் பேச முடியாதா"

"இல்லை... நான் பார்த்த வரை எந்த மருத்துவ குறிப்பும் அப்படி இல்லைவோக்கல் கார்டில் எந்த பாதிப்பும் ஏற்பட்டு இருக்காது என்றுதான் இருக்கிறது. ஆனால் அபி  நீண்ட காலமாக யாருடனும் பேசாமல் இருப்பதால் குரல் வளையில் இருக்கும் தசைகள் இறுகி இருக்க சந்தர்ப்பம் இருக்கிறது. அதற்கு நாம் முயற்சி எடுத்து பயிற்சி தந்தால் பேச வைத்து விடலாம்என்றான்.

"வேறு என்னவெல்லாம் திட்டமிட்டு வைத்திருக்கிறாய் சொல் அதிரதன் "என்றார் கங்காதரன் .

"அப்பா இப்பொழுது அபியை பொறுத்தவரை அதிதியின் சொல்லுக்கு கட்டுபட்டால் போதும்... பேச வைக்க வேண்டும். உடல் நிலையைப் பொறுத்தவரை எலும்புகளை பலப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் அவளால் எழுந்து நிற்க முடியும். எலும்புகள் வலுவில்லாததால் குறுகிய உடம்பிற்கு சென்றுவிட்டாள். ப்ரிட்டில் போன் டிஸிஸ்"

"சரியான சிகிச்சை தந்து எலும்புகளை பலப்படுத்த வேண்டும். அப்போதுதான் அவள் கொஞ்சம் கொஞ்சமாக நிமிர்ந்து நிற்க முடியும். இப்பொழுது அவளுடைய  மூன்றடி உயரம் அவள் குறுகி அமர்ந்திருப்பதால்தான் இருக்கிறது. பிறகு அந்த ஸ்கின் கேன்சர் உருவாவதை தடுக்க வேண்டும். பழையபடி நிறமிகளை கொண்டு வர வேண்டும். அப்பொழுதுதான் அவளுடைய உருவம் தெரியும். இதற்கு மேலும் அவளுடைய உள் உறுப்புகளில் என்னென்ன பாதிப்பு நடந்திருக்கிறது என்பதை  கண்டுபிடிக்க

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.