(Reading time: 12 - 23 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

"நான் உங்களை அக்காவாக நினைக்கவில்லை அம்மாவாக தான் நினைக்கிறேன்இனிவரும் நாட்களிலாவது என் அம்மாவுடன் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தயவு செய்து என்னை ஏமாற்றி விடாதீர்கள்" என்று அழ ஆரம்பித்தாள்.

"நான் தனித்திருந்த இரவுகளில் எனக்கு ஆதரவாக நின்ற உங்களின் அருகாமை எனக்கு வேண்டும். என் மனதின் வலிக்கு மருந்தாக இருந்த உங்களுடைய அன்பு எனக்கு வேண்டும் அந்த அரவணைப்பு எனக்கு கிடைக்குமா?" என்று கேட்டாள்.

அதிதி பேசிக்கொண்டே அந்த அறையின் வாசலில் சாய்ந்து அமர்ந்து படியின் மீது தலை வைத்து அழுது கொண்டே பேசிக் கொண்டிருந்தாள்.

அதிதியின் குரலில் தெரிந்த ஏக்கம், சோகம், கவலை அனைத்தும் அதிரதனை கலங்கடித்தது. இந்த வேதனையைகூட  அபி புரிந்து கொள்ளவில்லை என்றால்  அவளை மாற்றுவது சிரமமான காரியம் என்று தோன்றியது.

அதிதியை இதற்கு மேல் வருத்தப்பட விடக்கூடாது என்று எண்ணி அவளுடைய தோள்களை பற்றி எழ வைக்க முயற்சித்தான். அவனை திரும்பி பார்த்தவளிடம்,

"போதும்.. அழாதே எழுந்து வாநீ கவலைபடுவதை பார்க்க என்னால் முடியாது" என்று மெல்லிய குரலில் கிசுகிசுத்தான்.

தலையசைத்து சைகையில் அவனுக்கு மறுப்பு தெரிவித்த அதிதி தன் முயற்சியை தொடர்ந்தாள்.

 யாரும் எதிர்பாராத  ஒரு நொடியில் அறைக்கதவு திறந்து அவளை உள்ளே இழுத்துக் கொண்டது.

வெளியே இருந்தவர்கள் எட்டிப் பார்க்கும் பொழுது அங்கே ஒரே இருட்டாகத்தான் இருந்தது.

' அவளுக்கு சூரிய வெளிச்சம் ஆகாது என்பதால் அந்த அறையை இருட்டாக்கி வைத்திருக்கிறேன் " என்று அங்கிள் கூறினார்.

"நாம் இப்பொழுது அவர்கள் இருவரையும் தொந்தரவு செய்ய வேண்டாம். இருவரும் பேசிக் கொள்ளட்டும். அதிதி மட்டும் தான் பேச முடியும் என்று

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.