(Reading time: 6 - 12 minutes)
Idhu namma naadunga
Idhu namma naadunga

ஆனா பணக்காரங்களுக்கு எப்ப வேணுன்னாலும் ஜாமீன் கிடைத்து தப்பிக்க உதவியாயிருக்கு. படித்தவர்கள் தங்கள் அறிவை குற்றம் செய்வதற்கு அதிகமா பயன்படுத்தறாங்க, இதனாலே நல்லவங்க பயப்படறாங்க........"

 " இதுக்கு என்ன மருந்து? என்ன தீர்வு?"

 "இந்த நிலமை நம்ம நாட்டிலே மட்டுமில்லாமல், ஏறக்குறைய உலகம் முழுவதுமே நடக்கிறதனாலே, சிந்திக்க வேண்டியிருக்கு!

 தனிமனிதனின் மனப்போக்கு மாறியிருக்கு! 'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்' என்பார்களே, அதுதான் நடக்கிறது!

 சாமியார்கள், ஞானிகள், தங்களை கடவுளின் அவதாரமே சொல்லிக் கொள்பவர்கள், சமூக சிந்தனையாளர்கள் நிறைய பேசியும் பிரசாரம் செய்தும், பலனில்லே!

 ஆனால், பாரதி சொன்னதுபோல, 'தர்மம் மறுபடியும் வெல்லும்'!

 இந்த நம்பிக்கை தனிமனிதனுக்கு ஆழமாகவும், பொதுவாக உலகத்திலே பரவலாகவும், வரணும். அதற்கு அந்தப் பரமன் அருள் செய்யணும்!"

 " சரி, தாத்தா! உங்க விளக்கம் சிறப்பா இருக்கு! நான் கிளம்பறேன்!"

 கைலாயத்தில், ஈசனைக் காண துடித்துக்கொண்டிருந்த பார்வதி, பரமனைப் பார்த்ததும், பரவசம் அடைந்தாள்.

 இருவரும் கலந்து உரையாடுவதற்குள், 'ஹரஹர மகாதேவா!' என்று குரல் கொடுத்தார், நாரதர்!

 எல்லாம் நன்மைக்கே என்று நினைத்து இருவரும் அவரை வரவேற்றனர்.

 " த்ரிலோகசஞ்சாரி நாரதர் அவர்களே! காரணமின்றி விஜயம் செய்ய மாட்டீர்களே!......"

 " ஆம், மகாதேவா! சற்று அவசரமும்கூட!"

 " சொல்லுங்கள்! அது கலகத்தை ஏற்படுத்தாது என நினைக்கிறோம்......."

 " சிவசிவா! நல்லது நினைத்தே செய்வதுகூட, என் தலைவிதி, கலகமாகத் தெரிகிறது!"

 " வருத்தம் வேண்டாம்! வந்த விஷயம்?"

 " மூவுலகத்திலேயே இன்று நீங்கள் இருவரும் வாழ்கிற கைலாயத்தை உள்ளடக்கிய, பாரத புண்ணிய பூமிக்கு, ஒரு அவப்பெயர் ஏற்பட்டிருக்கிறது!"

 " அப்படியா?"

 " தங்களுக்கு தெரிந்ததுதான்! சபரிமலை ஐயப்ப தரிசனம், பெண்களுக்கும் கிடைக்கவும் சட்டம் வழி வகுக்கிற நேரத்தில், ஆலயங்களில் பூஜையும் திருவிழாவும் வெள்ளம்போல் மக்கள் கூடி சிறப்பாக நடக்கிறது ஒருபுறத்தில்! மறுபுறத்தில், தனிமனிதன் மனசாட்சியே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.